வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

Nov 14, 2024,05:16 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் தினசரி இரவில் மழை தொடரும். அதேபோல் இன்று முதல் நாளை வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்திற்கு பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென காற்றழுத்த தாழ்வு பகுதி வலு இழந்தது. இதனால் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்தது. 


இதற்கிடையே வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று கனமழை கொட்டி  தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது.




இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியதாவது, நெல்லை மாவட்டம், ஏர்வாடி, வள்ளியூர் பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வழக்கமாக மாலை அலுவலகம்  முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மீண்டும் லேசான மழைகளாக தொடர வாய்ப்புள்ளது. இந்த மழை சுமார்  5-10 நிமிடங்கள் குறுகியதாக இருக்கும்.


சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில்  தினசரி இரவு நேரங்களில் மழை தொடரும்.தென் சென்னையில் மீண்டும் நல்ல மழை பெய்யும்.  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் ஈரப்பதம் பரவி இருப்பது ஒரு நல்ல  செய்தி.


இன்று முதல் நாளை வரை  டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமந்தபுரம்,  தூத்துக்குடி ,நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் வழக்கம் போல் இரவு முதல் காலை வரை மழை பெய்யும். அதே சமயம் பகலில் ஆங்காங்கே மழை பெய்யும்.  உள் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். ஆனால் எல்லா இடங்களிலும் பெய்யாது.


சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதும் நிரம்பாததால், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற கவலை மக்களுக்கு வேண்டாம். ஏனெனில் காற்று சுழற்சிகள்,மிமேகக் கூட்டங்கள், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என அனைத்தும் தமிழ்நாட்டுப் பகுதிகள்தான் நீடிக்கின்றது. நமக்கு  இன்னும் பருவமழை காலம் அதிகம் உள்ளது. நாம் இப்போது நவம்பர் நடுப்பகுதியில்தான் இருக்கிறோம். அதனால் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்