சென்னை: ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படாமல் அது அவமதிக்கப்பட்டதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டசபையிலிருந்து வெளியேறியதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆளுநர் உரையுடன் அவைக் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆளுநர் உரையைப் படிக்காமலேயே ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை முதலில் ஒரு டிவீட் செய்திருந்தது. அதில், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் ஆகியோரை மேற்கோள் காட்டி ஒரு விளக்கம் இடம் பெற்றிருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டு, புதிதாக ஒரு விளக்கம் வெளியிடப்பட்டது. அதில் ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!
வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 13, 2025... இன்று முயற்சிகள் கைகொடுக்கும்
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
{{comments.comment}}