சென்னை: தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலமான, மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 செல்சியஸ் பதிவாகி இருப்பதாகவும், நகரங்களில் குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 18.1 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டின் நிலவும் கால நிலையை பருவங்களாகப் பிரித்திருந்தனர்.அதாவது இந்த இந்த மாதத்தில் மழை பெய்யும், இந்த மாதத்தில் மழை பெய்யாது.. குளிர் இருக்கும், என்ற வழக்கில் நம் முன்னோர்கள் பயிரிடுதல், அறுவடை செய்தல், என உழவுத் தொழிலை சூழலைக்கு ஏற்றார் போல பக்குவப்படுத்தி செய்து வந்தனர். குறிப்பாக பருவ காலங்களை பருவ காலங்களாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலோடு தொடர்புடைய ஒன்றாகவும் செயல்படுத்தி வந்தனர். அதன் மூலம் நமக்கு இயற்கையான உணவுகளும் சுகாதாரமான வாழ்வியல் முறைகளும் நமக்கு கிடைத்தது.
தற்போது உள்ள பருவ மாற்றத்தால் மழைக்காலங்களில் அதிக வெப்பமும் வெயில் காலங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு நோய்களும் தொற்றிக் கொள்கின்றன. அதேபோல் காலநிலை மாற்றத்தால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் நமக்கு கிடைக்கின்றன.அந்த வரிசையில் தற்போது தமிழ் மாதமான மார்கழி, தை முன்பனிக்காலம் எனவும், மாசி, பங்குனியை பின் பனிக் காலம் எனவும் பிரித்திருந்தனர்.
இந்தப் பருவத்தில் அதிக பனி நிலவுவதுடன் வெயில் அடித்தாலும், அதன் தாக்கமே இல்லாமல் சுகமாக இருக்கும். ஆனால் இன்றோ பனி காலத்தில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவும் இருந்து வருகிறது. அதாவது கடந்த வாரம் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்தும் வருகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் எவ்வளவு குளிர் நிலவியது, என்ற அறிக்கையை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
மலைவாசஸ்தலங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை

கொடைக்கானல்- 7.3
ஊட்டி - 9.2
குன்னூர் - 9.8
ஏற்காடு - 11.0
வால்பாறை - 13.5
ஏலகிரி- 14.8
தமிழ்நாட்டின் நகரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை
வேலூர் - 18.1
திருப்பத்தூர் - 18.2
சேலம் - 18.4
கோவில்பட்டி - 18.6
திருத்தணி - 18.8
பெரம்பலூர் - 18.9
மதுரை - 19.4
கோவை - 19.4
தருமபுரி - 19.5
திருவண்ணாமலை -19.6
திருப்பூர் - 19.9
திருச்சி - 20.4
கடலூர் - 20.4
ஈரோடு - 21
பாண்டி - 21
சென்னை AP - 21.5
காரைக்கால் - 21.8
சென்னை - 22.0
பாளையங்கோட்டை - 23.4
நாகப்பட்டனம் - 24.8
கன்னியாகுமரி - 24
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}