சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்து மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்து வந்தது.
இருப்பினும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவினாலும் மாலை இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது . பகலில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இதனால் வெயில் குறைந்து தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மாஞ்சோலை மலைப்பகுதியில் ஊத்து மற்றும் நாலுமூக்கு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 140 மில்லி மீட்டர் மழையும், நாலு மூக்கில் 128 மில்லி மீட்டரும் மழையும், கக்காச்சி பகுதியில் 118 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலை பகுதிகளில் 102 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மாஞ்சோலை மலைப்பகுதியில் இன்றும் கனமழை பெய்யும். நாளை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வட கிழக்குப் பருவ மழைக்காலமானது இன்றோடு நிறைவு பெறவுள்ளது. அருமையான மழையைக் கொடுத்த இந்த சீசனுக்கு நன்றி சொல்லி.. அடுத்து வரப் போகும் வாட்டி வதைக்கும் வெயில் காலத்துக்காக வியர்க்க விறுவிறுக்க காத்திருப்போம்.!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}