விசாகப்பட்டனம்: ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தெலுங்கு தேசமும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் அறிவித்துள்ளன. பாஜக இக்கூட்டணியில் உண்டா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தகவல் இருந்தால் அப்டேட் செய்கிறோம் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் வரவுள்ளது. இதையடுத்து அங்கு கூட்டணிகளை பலப்படுத்த கட்சிகள் மும்முரமாக உள்ளன. அங்கு தற்போது ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கட்சி ஆட்சியை வீழ்த்த தெலுங்கு தேசம் கட்சி படு தீவிரமாக உள்ளது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் அடைத்ததை அந்த கட்சி மறக்கவில்லை. எனவே ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைக் காலி செய்ய தீவிரமாக உள்ளார் நாயுடு.
இதனால் வருகிற சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி அமைத்துள்ளார். இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் 118 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது கூட்டாக அறிவித்துள்ளனர் நாயுடுவும், பவன் கல்யாணும்.
இந்த 118 தொகுதிகளில் 94 இடங்களில் தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது. 24 இடங்களில் பவன் கல்யாண் கட்சி போட்டியிடும். மொத்தம் 175 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. மற்ற இடங்கள் யாருக்கு ஒதுக்கப்படும், கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தகவல் வந்தால் அப்டேட் செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை பவன் கல்யாண் கட்சிக்கு 3 இடங்களை தெலுங்கு தேசம் ஒதுக்கியுள்ளது. ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் சேர்த்தே நடத்தப்படவுள்ளது.
சந்திரபாபு நாயுடு சில வாரங்களுக்கு முன்புதான் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதேபோல ஜெகன் மோகன் ரெட்டியும் கூட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் பின்னணியில் பாஜகவுக்கான டீலிங் குறித்து தெளிவில்லாத நிலையில் தொகுதிப் பங்கீட்டை நாயுடு அறிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வேட்பாளர்களை வெளியிட்ட பின்னர் நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் - ஜன சேனா கட்சி தேர்தல் போருக்குத் தயார். இது மாநிலத்தின் எதிர்காலத்துக்கான கூட்டணி, சிறந்த ஆந்திர பிரதேசத்துக்கான கூட்டணி என்றார்.
வேட்பாளர் பட்டியல் பார்க்க சூப்பராகத்தான் இருக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி, 2 பிஎச்டி பட்டதாரிகள், 3 டாக்டர்கள், 28 முதுகலை படிப்பு முடித்தவர்கள், 50 பட்டதாரிகள் என படித்தவர்களாக நிரம்பியுள்ளனர். அனைத்து சமூகத்தினருக்கும் பரவலாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}