ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில், கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறின்போது இளைஞர் ஒருவர், கண்டக்டர் கன்னத்தைப் பிடித்து நறுக்கென கடித்து வைத்து விட்டார். இதனால் கன்னம் வீங்கி, வலி தாங்க முடியாமல் கண்டக்டர் கதறினார்.
விடிஞ்சு எழுந்தா எத்தனையோ பிரச்சனைகள் தினமும் நாம் பார்க்கிறோம். ஒவ்வொன்றும் புது விதமாத்தான் இருக்கு.. இப்படியும் நடக்குது பாருங்களேன் என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு பல பஞ்சாயத்துக்கள் இருந்தாலும்.. இப்படியுமா என்று நம்மை திகிலடிக்க வைக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று கூட தெரியாமல் ஏடாகூடமாக நடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அப்படி தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இது ஒரு அடிதடி மேட்டர்.. கூடவே "கடி" மேட்டரும் கூட.. நடந்தது தெலங்கானா மாநிலத்தின் "அடி"லாபாத்தில்!

தெலங்கானா மாநிலம், அடிலாபாத்தைச் சேர்ந்தவர் அசிம் கான். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அடிலாபாத் செல்லும் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்துள்ளார். டிக்கெட் எடுத்த பிறகு பார்த்தால் உட்கார இடம் இல்லை. இதனால் நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால், பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது. நடத்துனருக்கும் ஆசிம் கானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்தினால் நடந்துனர் ஆசிமிடம் பணத்தை திருப்பி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறங்க கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிம் கான் பேருந்தில் இருந்த நடத்துனரின் கன்னத்தைப் பிடித்து பலமாக கடித்துள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறினார் கண்டக்டர். அவரது கண்ணுக்குக் கீழே நன்றாக பல் படும் அளவுக்கு கடித்து வைத்திருந்தார் அசிம் கான். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. அருகில் இருந்த பயணி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}