ஹைதராபாத்: தெலுங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ தியேட்டருக்குள் அனுமதிக்கக் கூடாது என அந்த மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படம் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் 4ம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியைப் பார்க்க திரளான ரசிகர் பட்டாளம் ஒன்று கூடினர். அப்போது பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தார்.
அப்போது அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் தேஜா காயமடைந்தார். காயமடைந்த மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது ராம்சரண் நடிப்பில் வெளிவந்த கேம் ரேஞ்சர் படத்திற்கு பிரீமியம் காட்சிகளும், டிக்கெட் உயர்வும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 4 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. விசாரணைக்குப் பின்னர், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்னதாகவும், இரவு 11 மணிக்கு பின்னதாகவும் திரைப்பட காட்சிகளுக்கு அனுமதிக்க கூடாது என்று மாநில அரசு மற்றும் தியேட்டர் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புஷ்பா 2 ப்ரீமியம் ஷோவின் போது பெண்ணின் மரணத்திற்கு வழி வகுத்த போதிலும், அவரது இளம் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் படத்திற்கு டிக்கெட் உயர்வு மற்றும் கூடுதல் நிகழ்ச்சிகளை அனுமதித்ததற்கு மாநில அரசை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}