"வேற லெவல் நைனா நீ".. பாட்டியைத் தூக்கி மடியில் உட்கார வைத்த அமைச்சர்.. ஓட்டுக்காக!

Oct 28, 2023,06:29 PM IST

ஹைதராபாத்: தெலங்கானாவைச் சேர்ந்த அமைச்சர் மல்லா ரெட்டி என்பவர், தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு பாட்டியைத் தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததால் பரபரப்பானது.


மல்லா ரெட்டி என்றாலே மார்க்கமான ஆளுதான். அவர் செய்யாத காமெடிகளே கிடையாது. அதுவும் தேர்தல் வந்து விட்டால் போதும்.. சின்ராசு போல மாறி விடுவார் மல்லா ரெட்டி.. என்ன செய்கிறார், என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது.. வேற லெவலுக்கு மாறி விடுவார்.


தெலங்கானாவில் மிகவும் பிரபலமானவர் மல்லா ரெட்டி. ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை வைத்துள்ளார். மிகப் பெரிய கோடீஸ்வரரும் கூட. மருத்துவமனை வைத்துள்ளார். மேச்சல் தொகுதியில் அவர் எம்எல்ஏவாக இருக்கிறார். மூத்த அமைச்சராகவும் இருக்கிறார். இவர் செம ஜாலியான மனிதர். ஏதாவது சேஷ்டை செய்தபடியே இருப்பார்.




கடந்த செப்டம்பர் மாதம் தனது மல்லா ரெட்டி நாராயணா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடந்த வாக்கத்தான் நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி டான்ஸ் ஆடினார். மேலும் ஜும்பா டான்ஸும் ஆடி அதிர வைத்தார். இது மாதிரி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது சில்மிஷம் செய்தபடியே இருப்பார். வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். 


இந்த நிலையில்,  தற்போது தெலங்கானா சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதே மேச்சல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் மல்லா ரெட்டி. இதற்கான பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். சும்மாவே கச்சை கட்டிக் கொண்டு ஆடுவார்.. தேர்தல் வேறு .. சும்மா இருப்பாரா.. வழக்கம் போல தனது விளையாட்டுகளை ஆரம்பித்து விட்டார்.


பிரச்சாரம் ஒன்றுக்காக சென்ற இடத்தில்  பெண்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்க முடிவு செய்தார் மல்லா ரெட்டி. அனைத்துப் பெண்களையும் அமர வைத்து நடுவில் இவர் உட்கார்ந்து கொண்டார். அப்போது மஞ்சள் நிற சேலை கட்டிய ஒரு பாட்டிம்மா, அமைச்சர் அருகே அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தும் மல்லா ரெட்டிக்கு என்ன தோணுச்சுன்னு தெரியலை.. பாட்டியைக் கூப்பிட்டு எழுந்து இங்க வாங்கன்னு அழைத்தார். பாட்டிக்கோ வெட்கம். என்ன அமைச்சர் நம்மைக் கூப்பிடுறார்னு. இருந்தாலும் அமைச்சர் கூப்பிட்டால் மறுக்க முடியுமா.. எழுந்து வந்தார்.


தன் முன்னே பாட்டிம்மாவை அழைத்த மல்லா ரெட்டி அவரை டக்கென தனது மடியில் அமர்த்திக் கொண்டார். அவ்வளவுதான்.. கூட்டமே கொல் என்று சிரித்தது. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.. பாட்டிக்கோ ஒரே வெட்கம்.. அமைச்சர் மடியில் நானா என்று வியப்பாகிப் போன அவருக்கு என்னடா நடக்குது என்ற பதைபதைப்பும் மனசுக்குள் ஓடியிருக்கும்.


மடியில் சும்மா உட்கார வைக்கவில்லை மல்லா ரெட்டி. மாறாக ஒரு குழந்தையை எப்படி மடக்கிப் பிடித்தபடி அமர்வோமோ, அதேபோல அந்தப் பாட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்.. பாட்டிக்கு முத்தம் கொடுத்து குழந்தை மாதிரி ஜுஜ்ஜுஜு என்று கொஞ்ச மட்டும் செய்யலை.. மற்றபடி அந்தப் பாட்டியை 

"டைம் மெஷின்" இல்லாமலேயே.. பிறந்த குழந்தைப் பருவத்துக்கே கூட்டிப் போய் விட்டார் அமைச்சர்.


கூட்டம் குதூகலமாக இந்தக் காட்சியைப் பார்க்க.. இப்ப எடுங்கப்பா போட்டோவை என்று அமைச்சர் சிக்னல் கொடுக்க.. சூப்பராக இந்தக் காட்சியை சுட்டுத் தள்ளி விட்டார்கள் கேமராமேன்கள்.. சில விநாடிகள் கழித்து, "குழந்தை" மெதுவாக இறக்கி விட்டார் மல்லா ரெட்டி. அவரும் விட்டா போதும்டா சாமி என்று நகர்ந்து ஓடினார்.


"உனக்காக எல்லாம் உனக்காக.. அதாவது ஓட்டுக்காக எல்லாம் ஓட்டுக்காக".. இப்படித்தான் பாடத் தோன்றுகிறது இவர்களை எல்லாம் பார்த்தால்!

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்