நியூயார்க் : இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள சூழலில், டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு டெலிகிராம் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பவெல் துரோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த முடிவு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களைப் பாதிக்கவில்லை என்றும், மாறாக 15 கோடிக்கும் அதிகமான சாதாரணப் பயனர்களைத் தண்டிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த தற்காலிகத் தடை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பவெல் துரோவ், "இந்திய அரசின் இந்த ஒருதலைப்பட்சமான முடிவு, தேர்வுத் தாள்களை கசியவிட்ட உள்விவகாரக் குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை. மாறாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத் தண்டித்துள்ளது. இந்தத் தடையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தேர்வுத் தாள் கசிவுகள் இப்போது பிற போட்டி செயலிகளுக்கு வாட்ஸ்ஆப் போன்ற பிற தளங்களுக்கு மாறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த தளத்தையும் முடக்குவது முறைகேடுகளைத் தடுக்காது என்றும் அவர் வாதிட்டுள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்தச் சூழலில், 'PAPER LEAKED NEET', 'Re-NEET 2026' போன்ற சில டெலிகிராம் சேனல்கள் மூலமாகப் போலி வினாத்தாள்களைப் பகிர்ந்து, மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிக்க சைபர் குற்ற கும்பல்கள் முயல்வதாகத் தேசிய தேர்வு முகமை கண்டறிந்தது. முன்னதாக இந்தச் சேனல்களை நீக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், "இறுதி கட்ட நடவடிக்கையாக" ஜூன் 22 நள்ளிரவு வரை டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்க ஐடி அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்தத் தடையுடன் சேர்த்து, டெலிகிராம் செயலியில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை மாற்றியமைக்கும் 'மெசேஜ் எடிட்டிங்' (Message Editing) வசதியை ஜூன் 30 வரை இந்தியாவில் முடக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு, பழைய தேதியில் வினாத்தாள் கசிந்தது போன்ற போலி ஆதாரங்களை உருவாக்க இந்த எடிட்டிங் வசதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து டெலிகிராம் செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உலக அளவில் டெலிகிராம் செயலிக்கு இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக விளங்கும் வேளையில், இந்தத் தடை டிஜிட்டல் உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}