மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

Apr 14, 2025,01:38 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை  மழை பெய்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் வெயிலும் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னை உட்பட  தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசிய வருகிறது. அத்துடன் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அதன்படி நேற்று திருத்தணி, ஈரோடு, மதுரையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. 




திருச்சி மற்றும் வேலூரில் தலா 100 டிகிரி ஃபாரின்ஹீட்டும், கரூர் பரமத்தி, சென்னை, திருப்பத்தூரில் தலா 98 டிகிரி ஃபாரின்ஹீட் வெயில் பதிவானது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்றனர். இதனால் தாகத்தை தணிக்க குளுமையான தர்ப்பூசணி, பழ ஜுஸ், கரும்புச்சாறு, போன்ற இயற்கை பானங்களை நாடி செல்கின்றனர். அதே சமயத்தில் இந்த வெப்ப அலையை சமாளிக்க முடியாமல் மக்கள் குளுமையான சுற்றுலா தலங்களை படையெடுக்க துவங்கி விட்டனர். தற்போது தொடர் விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணார், போன்ற சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி


தமிழ்நாடு வெயில்: 


மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் அதிக வெப்பநிலை, மற்றும் அதிக ஈரப்பதம் பதிவாக வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகரிக்க கூடும்.  ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 102 டிகிரி  பாரன்‌ஹீட்  வரை வெயில் பதிவாகும்.இதன் காரணமாக மக்களுக்கு உடல் உபாதைகளும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.



தமிழ்நாடு மழை: 


கடலோர ஆந்திரா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்