சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்த கோடை காலத்தில் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போதே வெப்ப நிலை அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

14ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்பவே சதம் போடும் நகரங்கள்
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}