- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தைப்பூசத்திற்கு 48 நாட்கள், 21 நாட்கள்,11 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் தை கிருத்திகை பிப்ரவரி 6 அன்று இருக்கலாம். தை மாதம் வரும் சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் மிகவும் சிறப்பானதாகும்.
அவற்றில் கார்த்திகை நட்சத்திரம் விரதம் முருகன் அருளை பெற விரும்பும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களும் அருள்வார்.
கார்த்திகை நட்சத்திரம் நேரம் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை இரவு 11 :19 மணி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வியாழன் இரவு 9:53 வரை. கார்த்திகை நட்சத்திரம் வியாழன் அன்று வருவது முருகப்பெருமானை வழிபடுவதற்கு மிகவும் சிறந்த நாள் ஆகும்.

பல வீடுகளில் கடுமையான விரத முறை கடைப்பிடிப்பார்கள். கந்தனை மனதில் நினைத்து நம் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகளை அவனிடம் முறையிட்டு வழிபட்டால் முருகன் அருள் அனைவருக்கும் கிட்டும். வீட்டில் ஒருவர் விரதம் முறை கடைப்பிடிப்பதால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அனைத்து வளங்களும் நலங்களும் கிட்டும் இந்த நாளில் விரதம் இருப்பவர் காலையில் குளித்துவிட்டு முருகன் கோவிலுக்கு சென்று அவர் சன்னதியில் நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
அவ்வாறு கோவிலுக்கு செல்ல இயலாதவர் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தை மலர்களால் அலங்கரித்து ,விளக்கேற்றி நைவேத்தியமாக பால், பழங்கள் ,பொங்கல் வைத்து வழிபடலாம். படிப்பில் வெற்றி பெற, நல்ல வேலை கிடைக்க, திருமண தடை நிவர்த்தி பெற, குழந்தை வரம் வேண்டி ,சொந்த வீடு அமைய கடன் பிரச்சினைகள் தீர, நோய்நொடி இன்றி வாழ, ஆரோக்கியம் சிறக்க, குடும்பம் நலம் பெற, கந்தனை மனதார நினைத்து வழிபடுபவர் என்றும் கைவிடப்படார்
முருகன் வேல் வைத்து வழிபாடு செய்பவர் அவ்வேலுக்கு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து வழிபடலாம். வீட்டில் இருந்து விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், குமாரஸ்தவம் ,வேல்மாறல், சஸ்திர பந்தம் போன்ற கந்தனை பற்றிய பாடல்கள் படிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் மாலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது மிகவும் சிறப்பு.
கந்தனை நினைத்து மௌன விரதம் இருப்பதும் மிகச்சிறப்பு .மனதை ஒருநிலைப்படுத்தி 108 முறை ஓம் சரவணபவ என்று மனதில் சொல்லி வழிபடலாம். அல்லது ஒரு நோட்டு புத்தகத்தில் 108 முறை எழுதி வழிபடலாம். கந்தன் அனுக்கிரகம் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கும்.
ஓம் முருகா சரணம்.. வேலும் மயிலும் சேவலும் துணை!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}