- ஸ்வர்ணலட்சுமி
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் ஒன்று தைப்பூச விரதம். இந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி செவ்வாய்கிழமை, தை 29ம் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
பழனியில் தான் முருகப் பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் தோன்றியது. காவடி எடுக்கும் முறை தோன்றிய நாளான தை மாத பெளர்ணமியில் விழா எடுத்து கொண்டாடுவதே தைப்பூச திருநாள் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள முருகன் ஆலயங்களில் இந்த நாளில் பெருவிழா எடுத்து, கோடிக்கணக்கான பக்தர்கள் காவடி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றுவது வழக்கம்.
முருகப் பெருமானுக்கு இருக்கப்படும் மிக நீண்ட விரதமான 48 நாட்கள் விரதம் தைப்பூச விரதம் தான். முருகப் பெருமானை மனதார வேண்டி ஏராளமான முருக பக்தர்கள் விரதம் இருப்பார்கள். அவ்வாறு 48 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் 21 நாட்கள் விரதம் இருக்கலாம். ஜனவரி 22ம் தேதியான இன்று துவங்கி, பிப்ரவரி 11ம் தேதி வரை 21 நாட்கள் விரதம் இருக்கலாம்.

தைப்பூச விரத இருக்க நினைப்பவர்கள் காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் முருகப் பெருமான் படமோ அல்லது உருவச்சிலை எதுவாயினும் இருந்தால் அதை வைத்து, முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம், பூ வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், வேல்மாறல், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, குமாரஸ்தவம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது தினமும் படித்து வரலாம்.
நைவேத்தியம் - முருகப் பெருமானுக்கு பழங்கள், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்த பால், கற்கண்டு, சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
கோலம் :
பூஜை அறையில் ஷட்கோண கோலமிட்டு, ஓம் சரவண பவ என்று எழுதி, பூஜை வைத்து அலங்காரம் செய்து, ஆறு விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இரு வேளையும் அளிக்க முடியாதவர்கள் ஒரு வேளை குளித்து விட்டு பக்தி சிரத்தையுடன் முருகனை வழிபட்டு தீப தூப ஆராதனை செய்து வழிபட்டு வர நமது வேண்டுதல்கள் அனைத்தையும் முருகப் பெருமான் நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
தினமும் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் விரதம் துவக்கும் நாளன்று முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு விட்டு வரலாம். சிலர் கடுமையான விரதம் இருந்து 3 முறை கந்தசஷ்டி கவசம் பாடி விரதம் இருப்பார்கள். இப்போதுள்ள நவீன காலத்தில் ஆடியோ, தொலைக்காட்சி, கைப்பேசி மூலம் கந்தசஷ்டி பாடலை ஒலிக்கச் செய்து, கேட்டு முருகன் வழிபாட்டினை அனுஷ்டிக்கிறார்கள்.
21 நாட்களும் தைப்பூச விரதம் இருக்க முடியாதவர்கள் தைப்பூசம் நாளன்று காலை முதல் விரதம் இருக்கலாம். முடிந்தவர்கள் உபவாசமாக ஒரு நாள் விரதம் இருக்கலாம். மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்களின் உடல்நிலைக்கு ஏற்ப எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு முருகனை வேண்டி தைப்பூச விரதம் இருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}