- அஸ்வின்
இயக்குநர் பா.ரஞ்சித், காலா கபாலி மெட்ராஸ் அட்டகத்தி படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் அவர்களை வைத்து தங்கலான் படத்தை எடுத்துள்ளார். படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அது மிகவும் கோலாகலமாக நடந்தது. ரஞ்சித்தும், படக்குழுவினரும் நிறைய விஷயங்களை மக்களோடு பகிர்ந்து கொண்டனர்.
படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் அந்தப் படத்தின் பிரமோஷனை பட குழு இப்பொழுது இருந்தே துவங்கியுள்ளது. இது தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல. இளம் இயக்குனர்களை உச்ச நடிகர்கள் கதை கேட்டு அவர்களது படங்களில் நடித்து தங்களது மார்க்கெட்டை உயர்த்தி வருவது தற்போது ரொம்ப எளிதாக நிகழ்கிறது. இளம் இயக்குனர்களிடம் கதை நன்றாக இருப்பதினால் தான் உச்ச நட்சத்திரங்கள் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு இளம் இயக்குனர்களும் உச்ச நட்சத்திரங்களுக்கு கதை எழுதும் பொழுது அவர்கள் ரசிகர்களை மனதில் வைத்து அவர்களுக்கு எந்த எந்த மாதிரி கதாபாத்திரங்களை வடிவமைத்து அவர்களை ரசிகர்களிடம் மிகவும் எளிமையாக கொண்டு சேர்க்கலாம், அப்படின்ற ஒரு வித்தையை கத்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இளம் இயக்குனர்கள். ஒரு இளம் இயக்குனர் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து படம் எடுக்கிறார் என்றால் அதுதான் அந்த படத்தின் முதல் வெற்றியாக நான் கருதுகிறேன். என்னடா இளம் இயக்குனர்கள் மட்டும்தான் கதை வைத்திருக்கிறார்களா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்தக் கேள்வியிலேயே உங்களுக்கு விடை இருக்கிறது.
சொல்லும் ஒவ்வொரு கதைகளிலும் ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருக்கும். அந்த கதாபாத்திரங்கள் இருக்கும் விதம் புதிதாக இருக்கும். அதுதான் கதாநாயகர்களை கவர்ந்து விடுகிறது. அதுக்கு பா ரஞ்சித் அவர்களும் விக்ரம் அவர்களும் ஒரு உதாரணம் என்று சொல்லலாம். தங்கலான் படத்தின் முன்னோட்டத்தில் விக்ரம் அவர்களை மிகவும் வித்தியாசமாக காட்டியுள்ளார் பா.ரஞ்சித். முன்பு நடித்த காசி, சேது உள்ளிட்ட படங்களில் விக்ரம் சார் மிகவும் மெனக்கெட்டிருப்பார். அந்த மெனக்கடலை பா ரஞ்சித் அவர்கள் இந்த படத்திலும் ஈஸியாக, மிக சுலபமாக கொண்டு வந்திருப்பார்.
ஒரு உச்சநட்சத்திரத்தின் கதாபாத்திரத்தை ஒரு இளம் இயக்குனர் சிறப்பாக வடிவமைக்கிறார் என்றால் அதைவிட ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் ஒன்றுமே இல்லை. மற்றொன்றும் இருக்கிறது. இயக்குனர் நடிகர் மட்டும் ஒத்துழைத்தால் அந்த படம் வெற்றியடையாது. மாறாக, அந்த படத்தில் வேலை செய்யும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இவர்களோடு சேர்ந்து கடினமாக உழைத்தால் தான் அந்த படம் எளிதாக வெற்றியடையும். அது பா ரஞ்சித்தின் ஒவ்வொரு படத்திலும் நடந்திருக்கிறது.
ரஜினி சாரை வைத்து மட்டும் இரண்டு படங்கள் வெற்றி கொடுக்கவில்லை ரஞ்சித். மாறாக, அவரது மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் வெற்றியால்தான் ரஜினிகாந்த்தே அவரை அழைத்து கதை கேட்டார். ரஞ்சித் அவர்கள் திறமையை வைத்து முன்னேறிய ஒரு இயக்குனர். அவரது கதை கதை தான் பேசுகிறது, அவர் அதிகம் பேசுவதில்லை. கதைதான் அவரது நாயகர்களை தீர்மானிக்கிறது. கதைகளை வித்தியாசமாக தயார் செய்கிறார். சார்பட்டா பரம்பரை அதுக்கு மிகவும் சிறந்த சான்று.

தொடர் தோல்வியில் துவண்டு இருந்த ஆர்யாவுக்கு சார்பட்டா படம் ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அந்த திரைப்படம் ஓடிட்டியில் தான் வெளியானது. அமேசான் தளத்தில் வெளியானபோதும் கூட, அனைவரின் கவனத்தையும் சார்பட்டா திரைப்படம் ஈர்த்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைய தலைமுறை ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினர்.
இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரமை வைத்து தங்கலான் படத்தில் என்ன மாதிரியான மாயாஜாலத்தை பா. ரஞ்சித் நிகழ்த்தியிருப்பார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. என்னென்ன புதுமைகளைப் புகுத்தியுள்ளார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}