தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்திக்கு 2 டன் காய்கறி , பழங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம். இவ்விழா மகாசங்கராந்தி விழாவாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டிற்கான மகாசங்கராந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். இங்குள்ள நந்தி பகவான் மிகவம் சிறப்புடையவர். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும் இக்கோவில் திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்டது தான் இந்த நந்தி சிலை. 12 அடி உயரம், 19.5 அடி நீளம்,8.25 அடி அகலம் கொண்டது இந்த நந்தி சிலை.
ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இந்த நந்தி பகாவனுக்கு விழா நடைபெறும். இந்தாண்டிற்கான விழா இன்று நடைபெற்று பெற்றது. முதலில் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 2000 கிலோவில் மகா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய்,கேரட், நெல்லிக்காய் போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம்,மாதுளை, கொய்யா போன்ற பழங்களும், லட்டு, அதிரசம், முறுக்கு, உலர்ந்த பழங்கள் மற்றும் மலர்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆராதனைகள் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து நந்தி முன்னர் 108 பசுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. சந்தனம், குங்குமம் இடப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பசுவிற்கும் தனிதனியாக பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நடந்த இவ் பூஜையில் பசுக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட 2 டன் காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
{{comments.comment}}