சென்னை: வெறும் ஆறு மாதம்தான் பழகினேனா .மீடியா முன்னாடி சீன் போட்டுக்கிட்டு இருக்காத.உன் கூட போய் வாழ்ந்தேன் பாரு என சீமான் பேட்டிக்கு பதில் அளித்து நடிகை சரமாரியாக கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் ஒன்றேகால் மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது சீமானிடம் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், கல்யாணம் குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை.ஆனால் ஒரு வருடத்தில் வெறும் ஆறு அல்லது ஏழு மாதம்தான் பேசி பழகினோம். விரும்பியே உறவு வைத்துக் கொண்டாள். அதுக்கு என்ன பிரச்சனை பிடிக்கல பிரிந்து போய் விட்டீர்கள். 15 வருடம் ஆகிவிட்டது.எனக்கு கல்யாணம் ஆகியே 14 வருடம் ஆகிவிட்டது. காதலித்த பெண்ணாக இருந்தால் இப்படி உச்சந்தியில் இருந்து கத்திக் கொண்டிருப்பாளா. இது காதலா அல்லது கன்றாவியா. 15 வருடம் ஆகிவிட்டது என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என் குடும்பத்தையும் என்னையும் அசிங்கப்படுத்திக் பழிபோட்டு அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார். என்னையா பாலியல் குற்ற வழக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறதா. விரும்பியே பாலியல் உறவு வைத்துக் கொண்ட கேவலம் புடிச்ச பொம்பள என ஆபாசமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் வெறும் 6 மாதம்தான் பழகுனேனா என சீமான் பேச்சுக்கு பதில் அளித்து நடிகை சரமாரியாக கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
என்னதான் உன் பிரச்சனை என்று மீடியாகாரர்கள் கேள்வி கேட்க வேண்டுமா சீமான். 2023ல் எதற்கு 50,000 போட்ட. உன்னுடைய மதுர செல்வம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தேன் எனக்கூறி என் மானத்தை வாங்கினான். அதெல்லாம் எதற்கு செய்தாய் என்று நான் வழக்கு கொடுத்திருக்கிறேன்.
நீ ஆம்பளையாக இருந்தால் எதற்கு மதுரசெல்வத்தை காப்பாற்றி விட்டு, பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் எனக் கூறி அப்புறம் எதற்கு என்னிடம் வீடியோ வாங்கினீர்கள்.
வாங்கி வைப்பீங்க. அப்போது நான் வாய பொத்திகிட்டு இருக்கணும். உங்க ஆட்கள் வந்து டெலிகாஸ்ட் பண்ண கூடாது என மிரட்டுவாங்க. நான் சாகனுமா. நீ ஆம்பளையாக இருந்தால் இது போன்று அநாகரீகமாக பேசாதே சீமான்.
2008 இலிருந்து வெறும் 6 மாதம்தான் பழகினேனா. அப்ப 2011 ல் ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். 2011 இல் நீங்க செய்த டார்ச்சலா தான் கமிஷனர் ஆபீஸில் கம்பளைண்ட் செய்தேன். இந்த அசிங்கமா பேசுற வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள். சும்மா டிராமா போடாத. நேற்று வரை என்னை யாருன்னு தெரியாது திமுக கூட்டிட்டு வந்தாங்க அப்படின்னு சொல்லிகிட்டு இருந்த, இப்ப நேத்து தானே சொல்லி இருக்க ஆமா நான் ஐம்பதாயிரம் கொடுத்து இருக்கேன் என்று. எதுக்கு மதுர செல்வம் என்னிடம் வீடியோ வாங்கிக்கிட்டு இருந்தான். எதுக்கு எங்க அக்காவுக்கு நீ வாழ்த்துக்கள் அனுப்பினாய். எதற்கு நீங்க இந்த டார்ச்சர் எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. எதுக்கு முதல்ல நீ ஐம்பதாயிரம் போட்ட. போட்டுட்டு மதுரசெல்வம் எதற்கு உன் புருஷன் புருஷன் என்று என்னிடம் வந்து பேசினான். இதற்கெல்லாம் நீ போய் அங்க பதில் சொல்லு. பொண்டாட்டி பொண்டாட்டி என்று பம்முனையே நீ அதற்கு முதலில் பதில் சொல்லு. அதையெல்லாம் விட்டுட்டு மீடியா முழுவதும் முன்னாடி சீன் போட்டுக்கிட்டு இருக்காய். கேவலம் புடிச்ச பொம்பளையாமில்ல. உன்ன மாதிரி துப்பு கெட்ட நாய்கூட வாழ்ந்தேன் பாரு எனக்கு தான் அந்த கேவலம். பெரிய ஆள் மாதிரி பேசாத என சரமாரியாக கேள்விகளைக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}