போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

Apr 17, 2025,11:30 AM IST

விழுப்புரம்: நீதிமன்றத்தின் உத்தரவின் படி 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. 



விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பட்டியலின சமூக மக்கள் வழிபாடு செய்ததற்கு வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்டது.


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டது. 




இந்த நிலையில் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டம்  எஸ்பி சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


திரௌபதி அம்மன் கோவில் இன்று காலை 6:15 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பட்டியலின சமூக மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

news

மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 19, 2025... இன்று அனுமன் ஜெயந்தி 2025

news

மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்