நியூயார்க்: ஹாலிவுட்டில் நடைபெற்ற 97வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ஐந்து விருதுகளை வென்றது அனோரா திரைப்படம்.
ஹாலிவுட்டில் ஒவ்வொரு வருடமும் திரையிடப்படும் சிறந்த படங்களை கௌரவிக்கும் பொருட்டு 23 துறைகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் உயரிய திரை விருதாக இது கருதப்படுவதால் இதை வெல்வதை ஒவ்வொரு கலைஞரும் கனவாகவும், பெருமிதமாகவும் கருதுகிறார்கள்.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இதில் அனோரா திரைப்படம் ஐந்து விருதுகளை வென்றது. அதாவது சிறந்த திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குனர், நடிகை, என 5 முக்கிய பிரிவுகளில் விருதுகளை குவித்து சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்த மிக்கி மேடிசன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளார்.

ஷான் பேக்கர் அனோரா திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர், சிறந்த அசல் திரைக்கதை, எடிட்டிங் என்ற மூன்று பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளார்.
பெரெஸில் நடித்ததற்காக, ஜோ சல்டானா சிறந்த துணை நடிகை மற்றும் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளார். தொடர்ச்சியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தி சப்ஸ்டென்ஸ் திரைப்படத்திற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
பாலஸ்தீன மக்கள் மீதான காசா போருக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட நோ அதர் லேண்ட் என்ற குறும்படம் சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது.அதேபோல் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் சிறந்த அனிமேஷன் பிரிவில் விருதுகளை வென்றது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது Wicked என்ற படத்திற்காக பால் டேஸ்வெஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தி சப்ஸ்டன்ஸ் திரைப்படம் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது.
தி ஃபுடாலிஸ்ட் திரைப்படத்திற்காக லோல் க்ராலி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
Dune part 2 movie சிறந்த ஒளி வடிவமைப்பு மற்றும் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
வலி!
மாறிக்கொண்டே இருப்பதும் மாறாதிருப்பதும் (The ever changing and UnChanging)
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
{{comments.comment}}