விஜய்யின் 50வது பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. கோட் 2வது பாடல் நாளை.. தெறி வெயிட்டிங்!

Jun 21, 2024,03:53 PM IST

சென்னை: விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதாவது ஜூன் 22 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு கோட் படத்தின் "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டாவது பாடல்  வெளியாக உள்ளது. இப்பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். இதனை ரசிகர்கள்  உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும்  கோட் படத்தை  வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைம் ட்ராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம்  தயாரித்துள்ளது.




இதில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, மோகன், அஜ்மல், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இப்படத்தின் விசில் போடு என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதனை தொடர்ந்து சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது.


நாளை விஜயின் ஐம்பதாவது பிறந்தநாள். இதையொட்டி இந்தப் பாடல் வருவது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. சின்ன சின்ன என்ற கோட் படத்தின் இரண்டாவது பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பதற்காக நாளை விஜயின்  பிறந்த  முன்னிட்டு வெளியிட  பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது தவிர இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக உள்ள   பாடல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளதால் கொண்டாட்டங்களுக்கு இப்போதிலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.




மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.


இதற்கிடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய நிகழ்வில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்