டோரன்டோ: காணாமல் போன வளர்ப்பு நாயை தேடிச் சென்ற இடத்தில் பனிக்கரடி ஒன்று மனைவியை தாக்கிதால் ஆவேசமடைந்த கணவர், அந்த கரடி மீது பாய்ந்து அதனுடன் சண்டை போட்டு படுகாயமடைந்தார்.
கனடா நாட்டின் ஃபோர்ட் செவர்ன் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வளர்க்கும் நாயை காணாமல், அதைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே பனிக்கரடி ஒன்று வந்து நின்றது. அந்த பனிக்கரடி எதிர்பாராத விதமாக மனைவியின் மீது பாய்ந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஒரு நொடி கூட யோசிக்காமல், அந்தக் கரடியின் மீது பாய்ந்து மனைவியை காப்பாற்ற கடுமையாக போராடினார். இதில் கணவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், பனிக்கரடி ஒருவரை தாக்கியதைப் பார்த்து உடனே தனது துப்பாக்கியை எடுத்து வந்து பனிக்கரடியை சுட்டுள்ளார். பனிக் கரடியை பலமுறை சுட்டதில் அந்த கரடி பயந்து அங்கிருந்து காட்டுக்குள் ஓடி விட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கை கால்களில் பலத்த காயமுற்ற நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சூடு பட்ட பனிக்கரடி மீண்டும் நகருக்குள் வரும் என மக்கள் அச்சமடைந்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்காப்புக்காக சுட்டதில் காயமடைந்த கரடி காட்டுக்குள் சென்று இறந்து விட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
துருவக் கரடிகள் கடல் பனியில் இருக்கும் போது வேட்டையாடி உணவை உண்ணும். ஆனால் இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தின் காரணமாக கடலின் பனி உடைந்ததால் பனிக்கரடிகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் பனிக்கரடிகள் உணவைத் தேடி உள் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பனிக்கரடி தாக்கினால் நிச்சயமாக உயிரிழக்க மாட்டீர்கள். அது ஒரு கட்டுக்கதை. அதனால் முடிந்தவரை போராடுங்கள் என அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
பராசக்தி படத்தில் அறிஞர் அண்ணாவின் முழக்கங்கள் நீக்கம்...சென்சார் போர்டு அதிரடி
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தவெக.,வின் ஆட்சியில் பங்கு ஆஃபர்...திருமாவளவன் விமர்சனம்
என் இதயத்தில் கலந்த தோழியே.. நன்றி!
மந்த்ராலயம் என்றொரு மகானுபவம்.. The Divine Odyssey to Mantralayam: A Spiritual Quest
தேமுதிக யாருடன் கூட்டணி? இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}