சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி பரவலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனால் மக்கள் வெப்ப அலையை தாங்க முடியாமல் தவிர்ப்பிற்குள்ளாகினர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கி காலை முதல் மாலை வரை வெயில் உச்சமாக இருந்தது. பின்பு வானில் இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. இதனால் தமிழகத்தில் தற்போது வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் கடலூரில் 4 சென்டிமீட்டர், ஏற்காடு மற்றும் சிதம்பரத்தில் தலா 3.5 சென்டிமீட்டர், மணல்மேட்டில் 3 சென்டிமீட்டர், பெரம்பலூரில் 2.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்:
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}