கொச்சி: மலையாளத்திலும், தமிழிலும் ஒரு கலக்கு கலக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல், எடுத்த எடுப்பிலேயே பாலிவுட்டுக்குப் பறக்கிறார். அவர் தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்க உள்ளதாக தற்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
ஜான் ஈ மன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிதம்பரம் பொடுவல். அதன்பிறகு மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்தப்படம் மலையாளம் படம் என்றாலும், தென்னிந்திய அளவில் மெகா ஹிட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. சிறிய பட்ஜெட் படம் என்றாலும், உலக அளவில் சுமார் ரூ.225 கோடியை வசூலித்த மலையாளப்படம் என்ற பெயரை பெற்றது.
கண்ணூர் ஸ்குவாட், பிரமயுகம் உள்ளிட்ட படங்கள் கேரளாவை தாண்டி பிற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வகையில் மற்றும் ஒரு வெற்றிப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இதற்குக் காரணம், இப்படத்தில் குணா குகைதான் முக்கியக் கதைக் களம். அதில் இடம் பெற்ற மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல பாடலும் சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தப் படத்தை மிகப் பெரிய ஹிட்டாக்கி விட்டது. இதனால்தான் வசூலில் பெரும் சாதனை படைத்து விட்டது மஞ்சும்மல் பாய்ஸ் படம்.
மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியாகிய பின்னர் நடிகர் கமலஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார். அவரை தொடர்ந்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் இப்படத்தை பார்த்துவிட்டு மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினர் அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் சிதம்பரம் பொடுவல் அடுத்து என்ன படம் எடுக்கப்போகிறார் என்று ரசிகர்களிடையே அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இயக்குனர் சிதம்பரம் தற்போது இந்தியில் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை அனுராக் காஷ்யப், விகாஷ் பால், விக்ரமாதித்யா மோத்வானே, மது ஆகியோரின் Phantom Studios தயாரிக்கிறது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்