புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக முள் சீதா பயன்பாடு

Dec 31, 2025,04:16 PM IST

சுமதி சிவக்குமார்


சமீபகாலமாக உணவு மற்றும் மருத்துவ உலகில் அதிகம் பேசப்படும் பழங்களில் ஒன்றாக 'முள் சீதா' உருவெடுத்துள்ளது. பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் நன்மைகள் ஏராளம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


முள் சீதா பழம் (  Soursop/ Graviola ) என்பது முள் நிறைந்த பச்சை தோலுடன் வெள்ளை நிற இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் கூடிய பழம். இது விட்டமின் (C,B) தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிஜட்ண்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 


பார்க்க சீதா பழம் போல் இருந்தாலும் ஸ்ட்ராபெரி மற்றும் அன்னாசி பழத்தின்  கலவையாக சற்று அமிலத்தன்மையுடன் இருக்கும். நாவல் பழம் மற்றும் கொய்யாப்பழம் போல் சிறிது உப்பு தூவி சாப்பிட நாவிற்கு நன்றாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி, பி1, பி2 , மெக்னீசியம் பொட்டாசியம் , இரும்புச்சத்து ( Iron) நிறைந்தது. 


பயன்கள்:




நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கம் கொடுக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் மற்றும் அழிக்கும் தன்மை உடையதாக கருதப்படுகிறது. இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு ஈடாகாது. இதன் இலை கசாயம் வைத்து குடிப்பதால் சீறுநீரக தொற்று & குடல் நோய்கள் , சரும நோய்கள் குணமாக்கும். மேலும் இலைச்சாறு  நிமோனியா , வயிற்றுபோக்கு மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்துகிறது.


எப்படிப் பயன்படுத்துவது?


இந்த பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாக தயாரித்து பருகலாம். இதன் இலைகளைக் கொண்டு டீ (Soursop Tea) தயாரித்து குடிக்கும் பழக்கமும் பரவலாக உள்ளது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

news

உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?

news

2026 புத்தாண்டில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்? ஒரு அலசல்

news

இந்தியாவின் புதிய மைல்கல்... உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உயர்வு!

news

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலின் தல வரலாறு

news

உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!

அதிகம் பார்க்கும் செய்திகள்