உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

Apr 04, 2025,06:48 PM IST

சென்னை: உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் பதிவிட்டுள்ளார். 


இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன், தமிழ் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆகி பின்னர் காதல் கொண்டேன் திரைப்படம்  மூலம் இயக்குனராக வலம் வந்தார். இப்படத்தில் முதல் முதலாக அறிமுகமான நடிகர் தனுஷ் செல்வராகவனின் தம்பி ஆவார். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகப் போர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில்  சிறந்த இயக்குனராகவும் திகழ்ந்தார்.


இதற்கிடையே  இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு கீதாஞ்சலி ராமன் என்பவரை இரண்டாவதாக மணந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து வெற்றி இயக்குனராக திகழ்ந்த செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், போன்ற படங்கள் மூலமாக தன்னை நடிகராகவும் நிலை நிறுத்தினார்.




இப்படி பன்முகத் திறமைகளைப் பெற்ற செல்வராகவன் சமீப காலமாகவே தனது வாழ்க்கை அனுபவங்களை தத்துவமாக அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதாவது  "அனுபவம் தத்துவமல்ல"  என்ற தலைப்பில் இவர் பதிவிடும் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது .


அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சுவாரஸ்யமான தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் வாழ்க்கையில் ஒருவரை கடவுள் துண்டித்துவிட்டால், அதன் மதிப்பை நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! பின்னர் நீங்கள் கடவுளுக்கு நன்றி செலுத்தி அழுவீர்கள் என  பதிவிட்டுள்ளார். 


அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தம்பியான தனுஷ் நடித்து வந்த நிலையில், தற்போது தம்பி தனுஷ் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில்  செல்வராகவன் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்