பார்க்கத்தான் காமெடியன்.. ஆனால் பாக்கெட்டில் ரூ. 490 கோடி.. பிரமிக்க வைக்கும் பிரம்மானந்தம்!

Feb 28, 2024,06:45 PM IST

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அவர்களை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இருந்தார்.. அவர்தான் ராமராஜன்.. யாருமே இப்போது நம்ப மாட்டார்கள்.. அப்போதே, அவர் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கினார். அப்படி ஒரு நடிகர் இப்போதும் தெலுங்கு சினிமாவில் இருக்கிறார். அவர்தான் பிரம்மானந்தம்.


பிரம்மானந்தம்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே கபகபவென சிரிப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளும்.  அப்படி ஒரு பன்முகத் திறமை கொண்ட காமெடியன். இவர் நடிக்காத ரோலே கிடையாது.. ஹீரோக்களேப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு மிரட்டலான நடிப்பைக் கொடுப்பவர். இவர் ஒரு படத்தில் இருந்தால், அந்தப் படத்தின் ஹீரோ பற்றி யாருமே கவலைப்பட மாட்டார்கள். மனிதர் சில நிமிடமே வந்தாலும் கூட சில்லாக்ஸாக தனது ரோலை செய்து விட்டு போய் விடுவார். அப்படி ஒரு அசாத்திய திறமை கொண்டவர்.




இந்தியாவில் உள்ள காமெடி நடிகர்களிலேயே இவர்தான் மிகப் பெரிய கோடீஸ்வர நடிகராம். நம்ப முடியவில்லை அல்லவா.. உண்மைதான். ரூ. 490 கோடி அளவுக்கு இவரிடம் சொத்து உள்ளதாம். ஆனால் அத்தனையும் இவரது கடுமையான உழைப்பால் வந்தது என்பதுதான் என்பதே இங்கு முக்கியமானது.


மிகப் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் பிரம்மானந்தம். ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டனபள்ளி அருகே உள்ள சகன்டிவரி பாலம் கிராமத்தில் பிறந்தவர்தான் பிரம்மானந்தம். அப்பா சாதாரண மர வேலை பார்த்து வந்தவர். பெரிய குடும்பம் என்பதால் சமாளிக்க சிரமப்பட்டார் பிரம்மானந்தத்தின் தந்தை. பிரம்மானந்தம் குடும்பக் கஷ்டத்தையும் தாண்டி கல்லூரி வரை படித்தவர். கல்லூரியில் ஆசிரியராக வேலையில் சேர்ந்து சில காலம் வாத்தியாரக இருந்துள்ளார். அப்போது நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இவரது காமெடியான நடிப்பு பலரையும் கவரவே, டக்கென சினிமாவுக்கு மாற முடிவு செய்தார்.




நடிப்புடன் மிமிக்ரியும் நன்றாக தெரியும் என்பதால் இவரது நாடகங்களுக்கு செம கூட்டம் வருமாம். மக்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ரசிப்பார்களாம். அப்படி ஒரு நாடகத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் ஒரு இயக்குநரின் பார்வையில் பட்டு டிவி நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பகபகலு என்று தொடரில் நடித்தபோது அது பலரையும் கவர்ந்தது. அதன் மூலமாக சினிமா வெளிச்சமும் இவருக்குக் கிடைத்தது. ஜந்தியாலா என்ற இயக்குநர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பியது இவரது காமெடி நடிப்பு.


ஆஹா நா பெல்லன்டா என்ற அந்தப் படம் 1987ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு நான் ஸ்டாப் அட்டகாசம்தான். தொடர்ந்து படங்கள் குவிய டோலிவுட்டின் முன்னணி காமெடியனாக உருவெடுத்தார். இன்று அகில இந்திய அளவில் மிகப் பெரிய காமெடியர்களில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் கூட பிரம்மானந்தம் சில படங்களில் நடித்துள்ளார்.  ஹீரோக்களுக்கு இணையான பிரபலமும் செல்வாக்கும் இவருக்கு உள்ளது.


ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். இதுதவிர விளம்பரங்களிலும் கூட நடிக்கிறார் பிரம்மானந்தம். இவரது சொத்து மதிப்பு ரூ. 490 கோடி என்று சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் பிரமாண்ட பங்களா உள்ளது. ஆடி கார் உள்ளிட்ட பல்வேறு வகையான சொகுசு கார்கள் உள்ளன. விவசாயமும் பார்த்து வருகிறார். நல்ல ஓவியரும் கூட. அட்டகாசமாக ஓவியம் வரைவாராம் பிரம்மானந்தம்.




பிரம்மானந்தம் தவிர இந்தியாவின் இதர பணக்கார காமெடியன்கள் வரிசையில் பிரபல கபில் சர்மா வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 300 கோடியாகும். அதேபோல பாலிவுட் காமெடியன் ஜானி லீவரின் சொத்து மதிப்பு ரூ. 225 கோடியாகும். நடிகர் பரேஷ் ராவல் ரூ. 93 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளாராம்.  நம்ம ஊர் காமெடியன்களின் சொத்து மதிப்பு குறித்துத் தெரியவில்லை.


கடந்த 37 வருடமாக நடித்து வரும் பிரம்மானந்தம் வாழும் நடிகர்களிலேயே அதிக படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் கெளதமும் நடிகர்தான். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பிரம்மானந்தம்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்