சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா சூர்யாவின் கங்குவா படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யா ஏழு வேடங்களில் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ரவி ராகவேந்திர மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கங்குவா படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவில் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் 3டியில் படமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவாவின் விஸ்வாசம் ஹிட்டடித்த நிலையில், அண்ணாத்த சரிவர ஓடாத நிலையில், இந்த படம் என்னாவாகுமோ என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் கங்குவா திரைப்படம் 2 பாகங்ளாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களையும் இயக்குனர் தற்போது முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் முதல் பாகத்தை வெளியிட்ட பின்னர் தான் 2ம் பாகத்தை வெளியிட சிவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் இயக்குனர் சிவாவுக்கு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்த நாள் என்பதால் அன்று படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}