சென்னை: சந்தானம் நடிப்பில் டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல் (devils double next level) திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
90 காலகட்டத்தில் வடிவேலு காமெடியை தொடர்ந்து விவேக் தனக்கென்ற தனித்துவமான காமெடி நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.அதே ஜெராக்ஸ் ஆகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சந்தானம். முன்னதாக லொள்ளு சபா காமெடி தொடர் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இதனைத் தொடர்ந்து காமெடி படங்களில் இவரை வரவேற்கும் ரசிகர்கள் அதிகரித்து வந்த நிலையில் இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து படத்தில் ஹீரோவாக தனது ஆர்வத்தை செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஹாரர் கலந்த காமெடி படமான தில்லுக்கு துட்டு திரைப்படம் ஹிட் அடித்தது.
இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக உயர்ந்தார். மீண்டும் அதே பாணியில் தில்லுக்கு துட்டு 2 படமும் வெற்றியை நிலைநாட்டியது. பின்னர் ஹாரர் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான படைப்பாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது.
இந்த நிலையில் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீர்த்திகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் யூட்யூபில் புதிய படங்களை விமர்சனம் செய்யும் சந்தானம் ஒரு பேயின் கோபத்திற்கு ஆளாகி சந்தானத்தை சினிமாவுக்குள் அனுப்புகிறது. அப்படி செல்லும் சந்தானம் அங்கு எந்தெந்த பேய்களை சமாளித்து எப்படி வெளி வருகிறார் என்பதை தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் காக்க காக்க படத்தை இயக்கிய கௌதம் மேனன், அப்படத்தில் வரும் உயிரின் உயிரே பாடலில் சூர்யா எப்படி நடித்தாரோ அதேபோன்று பாடிக்கொண்டே ஓடுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா தயாரித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில், இப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீசாகிறது. ட்ரெய்லருக்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ள நிலையில், படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன்.. சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பிரதமர் மோடியின் ரஷ்யா சுற்றுப்பயணம் ரத்து!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
தவெகவில் self discipline.. 100% முக்கியம்.. ஸ்ட்ரிக்டா பாலோ செய்யனும் ஃபிரண்ட்ஸ்..விஜய்!
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!
இந்து சமய அறநிலையத் துறை சார்பில்.. 70 வயது பூர்த்தி அடைந்த 100 தம்பதிகளை கௌரவிக்க திட்டம்!
சந்தானம் நடிப்பில்..ஹாரர், காமெடி கலந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ..!
அவல் பாயாசம் பண்ணுங்க.. தமிழ்நாட்டு ஸ்டைலில் ஆக்ஷயா திருதியையைக் கொண்டாடுங்கள்!
அட்சய திருதியை வந்தாலே தங்கம்தானே.. நகை வாங்க சென்னைதான் டாப்பாம்!
{{comments.comment}}