- ரேணுகா ராயன்
சென்னை: இந்தியாவின் பச்சை கவசம் என்று அழைக்கப்படும் ஓர் அழகான... இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த... நாட்டின் வடமேற்கு பகுதியின் அரணாக விளங்கும் ஒரு முக்கிய மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர். 650 கி.மீ. தூரம் கொண்ட இந்த மலைத்தொடர் புரோட்டோசோயிக் காலத்தை சேர்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது டைனோசர் காலத்துக்கு முற்பட்டது, இமயமலைக்கும் மூத்த மலையாக அறியப்படுகிறது. இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, பூர்வாஞ்சல் மலை தொடர், விந்திய மற்றும் சாத்பூரா போன்ற மலைகளோடு ஒப்பிடுகையில் ஆரவல்லி மலைத்தொடர் பற்பல கனிம வளங்களை கொண்டுள்ளது.
வடக்கே டெல்லியில் தொடங்கி தெற்கு ஹரியானா ராஜஸ்தான் வழியாக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் வரை நீண்டு இருக்கிறது. மலைத்தொடரில் மிக உயரமான சிகரம் 5650 அடி உயரம் கொண்ட குரு சிகர் ராஜஸ்தானில் உள்ளது. சபர்மதி, சம்பல், லூனி போன்ற ஆறுகளின் பிறப்பிடமாக ஆரவல்லி மலை விளங்குகிறது.

பல குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள ஆரவல்லி, துத்தநாகம், செம்பு, தங்கம், டங்ஸ்டன், மார்பிள், கிரானைட் போன்ற எண்ணிலடங்காத கனிம வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்த மலைத்தொடரை சூறையாடும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக சுரங்க வேலைகள் ஏற்கனவே நடப்பதாகவும் மலைத்தொடரை காக்க வேண்டும் என்றும் 20240வழக்கு தொடரப்பட்டு நீண்ட காலமாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த ஒரு புதிய வரையறையை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இது அம்மாநில மக்களையும் ஆய்வாளர்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் 100 மற்றும் அதற்கு மேல் உள்ள குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடராக கருதப்படும் என்ற இந்த வரையறை மக்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கியுள்ளது. எனினும் மத்திய அரசு மலையின் 90 சதவீதம் காக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள குன்றுகள் பெரும்பாலானவை 100 மீட்டருக்கும் உயரம் குறைவானதே.
இந்த வரையறையால் பெரும்பாலான குன்றுகள் மலைத்தொடரில் இருந்து அழிக்கப்படும் அபாயம் உள்ளது. சுரங்க வேலைகள் விரைவாக தொடங்கப்படலாம். ஆக்கிரமிப்புகள் மிக அதிகமாக நடக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். சுத்தமான குடிநீர் காற்று மற்றும் பல்லுயிர் பெருக்கம் போன்றவை மிகப்பெரிய சவாலாகிவிடும்.
தார் பாலைவனத்தில் இருந்து ஏற்படும் வெப்பத்தன் தாக்குதலிலிருந்து ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களை ஆரவல்லி மலைத்தொடர்தான் காத்து வருகிறது. இந்த குன்றுகள் சூறையாடப்படும்போது பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை வருங்கால சந்ததியினர் சந்திக்க நேரிடும். மலைத்தொடர் காக்கப்படும், அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தாலும் ஆரவல்லி மீதான கவலை மக்களிடையே நீங்கவில்லை.
குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஆரவல்லி மீட்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது. மலைத்தொடர் முழுவதும் பெரும்பாலான குன்றுகள் 100மீ குறைவாகவே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த வரையறை மீதான ஏற்பு சுரங்க வியாபாரிகளை கட்டவிழ்த்து விடும். மலைத்தொடர் முழுவதையும் அவர்கள் அழித்துவிடுவார்கள் என்று ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநில மக்கள் கவலையின் உச்சத்தில் உள்ளனர். ஆரவல்லி சூறையாடப்பட்டால் அது டெல்லி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
கனிம வளங்களை கொண்டு நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்தை காட்டிலும் நம்மை காக்கும் இயற்கையின் நீண்ட கால பயன்பாட்டை நம் கருத்தில் கொள்ள வேண்டும். இது ஆரவல்லிக்கு வந்த சோதனை மட்டுமல்ல நாட்டின் பல்வேறு மலைத்தொடர்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. ஆரவல்லி காக்கப்பட்டால் ஏனைய மலைத் தொடர்களும் காக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகும்.
அழிந்து வரும் காடுகளை நம் மீண்டும் உருவாக்கிவிடலாம். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆறுகளை மீட்டு விடலாம். ஆனால் அழித்துவிட்ட ஒரு மலைத்தொடரை எத்தனை முயற்சி செய்தாலும் நம்மால் உருவாக்க முடியாது என்ற பேருண்மையை உணர தவறினால் ராஜஸ்தான், அரியானா மட்டுமல்ல மொத்த நாடும் பாலைவனமாகும். ஆரவல்லி காக்கப்பட வேண்டிய அவசியத்தை அரசு மற்றும் சுரங்க வியாபாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நாளைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும். இந்திய நாட்டின் பச்சை கவசமான ஆரவல்லி மலைத்தொடர் நமது பெருமை மட்டுமல்ல பாதுகாப்பும் கூட.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆரவல்லி
இயற்கை அழகை தாங்கி நிற்கும் இந்த ஆரவல்லி மலைத்தொடர் பல வரலாறுகளை கொண்டுள்ளது. ராஜஸ்தான் ராஜபுத்திர பேரரசு கட்டியுள்ள பிரமிக்க கூடிய பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் கோட்டை, நாகர்கர் கோட்டை, ரந்தன்பூர் கோட்டை, அம்பர் கோட்டை என கோட்டைகளால் நிறைந்துள்ளது ஆரவல்லி மலைத்தொடர்.
இந்தியாவின் பெருஞ்சுவர் என்ற பெருமையைக் கொண்ட கும்பல்கர் கோட்டை 36 கிலோமீட்டர் தூரம் ஆரவல்லி மலையில் நீண்டிருக்கிறது. 15ம் நூற்றாண்டில் மன்னர் ராணா கும்பா கட்டிய இந்த பெருங்கோட்டை பல கோயில்களை உள்ளடக்கியுள்ளது. யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள இந்த வரலாற்று புகழ்மிக்க கோட்டை ராஜஸ்தானில் மணிமகுடமாக திகழ்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
{{comments.comment}}