திரையரங்குகளில் நாளை பகல் நேர காட்சிகள் ரத்து.. திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Apr 18, 2024,06:46 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாளை வாக்குப்பதிவு நாளன்று தமிழ்நாட்டு திரையரங்குகளில் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.  நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். ஓட்டு போடுவது ஜனநாயக கடமை  என்பதை கருத்தில் கொண்டு  நாளை தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் பகல் நேர காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1168 திரையரங்குகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நாளை மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அனைவரும் ஓட்டு போட வேண்டும்.. இது உங்கள் கடமை உரிமை..மறவாதீர்!

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்