கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

Oct 07, 2025,02:39 PM IST

தேனி: ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். பலர் அதை தாங்களாக உணர்கிறார்கள். சிலருக்கு யாராவது அதை உணர வைத்து தூண்டுகோலாக மாறி தூக்கி விடுவார்கள். அப்படித்தான் நம்ம தம்பி ஹரிஸும்.


தித்திக்கும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் நம்ம ஹரிஸ். 13 வயதாகிறது. அங்குள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். செஸ்ஸில் கில்லியாக இருக்கிறார். எந்தப் போட்டிக்குப் போனாலும் ஜெயிக்காமல் வருவதில்லை. வைத்திருக்கும் சான்றிதழ்கள், பரிசுகளைக் குவித்தால் கிட்டத்தட்ட குட்டி மலை போல வரும் போல. அந்த அளவுக்கு வென்று கொண்டிருக்கிறார்.


எப்படி ராஜா இப்படி கலக்குற இந்த வயதிலேயே என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, தென் மேற்குப் பருவக் காற்று போல ஜிலுஜிலுவென நம்மிடம் ஹரிஸ் கொட்டியது.. அவரது வார்த்தைகளிலேயே..




எனது பெயர் அ. ஹரிஸ். நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். எனது பள்ளியின் பெயர் வேலம்மாள் போதி கேம்பஸ், தேனி.


நான் முதன்முதலாக  எனது பொழுதுபோக்கிற்காக கொரோனா நேரத்தில் என்னுடைய மாமாவிடம் சதுரங்கப் போட்டி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அவர்தான் எனக்கு சொல்லிக்  கொடுத்தார். பள்ளியில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். முதலில் படித்த பள்ளியின் பெயர் பூர்ண வித்ய பவன் தேனி. அங்கிருந்து தான் என்னுடைய  முதல் போட்டியில் பங்கேற்றேன்.


தேனி வீரபாண்டி க்கு சென்று விளையாடினேன். அங்கு ஐந்திற்கு மூன்று என்ற புள்ளி விகிதத்தில் சான்றிதழ் மட்டும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன். அதன் பிறகு ஒவ்வொரு இடத்திலும்  மூன்று என்ற விகிதத்தில் சான்றிதழ்  பெற்று வந்தேன். பிறகுதான் இதில் நன்றாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று தேனியில் உள்ள கிராண்ட் மாஸ்டர் சதுரங்க பயிற்சி வகுப்பில் எனது மாமா சேர்த்துவிட்டார். அதற்கு முன்பு வரை நான் கற்றுக் கொண்டதை வைத்து மட்டும்தான் விளையாடினேன். அதன் பிறகும் தோல்வியை சந்தித்து பிறகு தான் வெற்றி பெற ஆரம்பித்தேன்.




ஐந்திற்கு மூன்று வாங்கிக் கொண்டிருந்த நிலைமையில் இப்பொழுது ஐந்துக்கு ஐந்து பெற்று முதலிடம் பெற்றுள்ளேன். நான் அனைத்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவன்தான். ஆனால் ரொம்பப் பிடித்தது செஸ் தான். அதைப் புரிந்து கொண்ட அம்மாவும் எனது மாமாவும் என்னை ஊக்குவித்தார்கள். அதிலிருந்து நான் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டேன். வெற்றி பெறவும் ஆரம்பித்தேன்.


மதுரையில் ஒரு போட்டியில் ஏழுக்கு ஐந்து என்ற விகிதத்தில் 14வது பரிசு பெற்றேன். இதன் பிறகு சிவகாசியில் இன்டர்நேஷனல் புள்ளி பட்டியல் போட்டியில் பங்கேற்க சென்றேன். அங்கு தோல்விதான் அடைந்தேன், மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அதுதான் நான் முதன் முதலாக விளையாடும் புள்ளி பட்டியல் போட்டி. ஆகையால் அம்மாவும் மாமாவும் இதில் பங்கேற்பதே மிகப்பெரிய விஷயம், உன்னால் முடியும். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி ஊக்குவித்தார்கள்.


அதன் பிறகு இரண்டு போட்டியில் கலந்து கொள்ளவில்லை. பிறகு தான் அம்மாவும் மாமாவும் விளையாடு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அப்போதுதான் மாவட்ட அளவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் விளையாடி ஐந்திற்கு ஐந்து என்ற விகிதத்தில் முதல் பரிசை பெற்றேன். என்னை ஊக்குவித்த எனது குடும்பத்தாருக்கும் பயிற்சி அளித்த எனது மாஸ்டர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல சாதனைகளை புரிய நான் ஆசைப்படுகிறேன் என்று கூறி நிறுத்தினார் ஹரிஸ்.




சரி இந்த விளையாட்டு அனுபவத்திலிருந்து நீ உணர்ந்துள்ள பாடம் என்ன தம்பி என்று கேட்டோம்.. அதற்கு ஹரிஸ் சற்றும் தயக்கமில்லாமல், தோல்வியை கண்டாலும் துவண்டு விடாமல் சாதித்து காட்ட வேண்டும். இதுதான் நான் கற்றுக் கொண்டது என்றார் பளிச்சென.


ஹரிஸுக்கு மட்டுமல்ல மக்களே.. எல்லோருக்குமே பொருந்தக் கூடியதுதான் இது இல்லையா.. ஹரிஸை வாழ்த்துவோம்.. அவரைப் போல சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவரையும் ஊக்குவிப்போம்.


ஹரிஸ் விளையாட்டில் மட்டுமல்ல பிற துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக இருக்கிறார். ரத்னா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளரிர்கள் பன்னாட்டு மையத்தின் சார்பில் நடத்தப்படும் திருக்குறள் வினாடி விடை நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார். அதேபோல எண் சூத்திரம் என்ற 8 மணி நேரம் வாய்ப்பாடு எழுதும் உலக சாதனை நிகழ்விலும் ஹரிஸ் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளாராம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குஜராத் முதல்வராகப் பதவியேற்று 25 வருடங்கள்.. அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி

news

2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு.. 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

news

கரண்டி பிடிக்கவும்.. கார் ஓட்டவும்.. பெண்ணென்னும் சக்தி!

news

பீகார் சட்டசபைத் தேர்தலில் யார் யாருக்கு சீட்.. காங்கிரஸ் நாளை முக்கிய முடிவு!

news

பீகார் சட்டசபை தேர்தல்: பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சமபங்கு.. சிறிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட்?

news

Coldrif இருமல் மருந்துக்கு பஞ்சாபிலும் தடை.. ம.பியில் 16 குழந்தைகள் பலியானதன் எதிரொலி

news

உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்

news

கடவுளும், எங்க மாமாவும்தான் காரணம்.. கெத்தாக காலரைத் தூக்கி விடும் ஹரிஸ்.. தம்பி செஸ்ஸில் புலிங்க!

news

கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

அதிகம் பார்க்கும் செய்திகள்