சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.

இந்த ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தநிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நானும் ரவடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல என்று நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் சார்பாக வழக்கறிஞர் பதில் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
{{comments.comment}}