பறவை மாதிரி வாழணும்.. சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பறந்து திரியலாம்.. ஜாலியாக இருக்கலாம்.. யாருக்கும் பயப்படத் தேவையில்லை.. எந்த வேலையும் இல்லை. அதிலும் அந்தக் கழுகு மாதிரி இருக்கணும்.. அப்பதான் உயர உயர பறக்கலாம்.. உற்சாகமாக திரியலாம் என்று பலரும் ஆசை ஆசையாக சொல்வார்கள்.
ஆனால் பறக்கத் தெரியாத, முடியாத பறவைகளும் இருக்கின்றன. அது தெரியுமா உங்களுக்கு? .. அழகான சில கிளி வகை முதல் ஆக்ரோஷமான நெருப்புக் கோழி வரை பறக்க முடியாத பல பறவைகளும் இருக்கின்றன. வாங்க பார்க்கலாம்.
நெருப்புக் கோழி

சின்ன இறக்கைதான் இவற்றுக்கு இருக்கு. அதேசமயம், பருமனான உடல்.. இவற்றால் ஓடத்தான் முடியும். அதிகபட்சம் ஜம்ப் செய்யும். பறக்க முடியாது. பறவைகளின் அரசன் எந்று இதைச் சொல்வாகள். நல்ல கம்பீரமான பறவைதான். நீண்ட காலம் வாழக் கூடிய பறவைகளும் நெருப்புக் கோழிகள்தான். 9 அடி வரை உயரம் இருக்கும். 300 பவுன்டு எடை இருக்கும். உலகிலேயே மிகப் பெரிய முட்டையும் இவற்றின் முட்டைதான். கால்கள் மிக பலமானவை. எட்டி உதைத்தால் அவ்வளவுதான். மணிக்கு 45 மைல் என்ற வேகத்தில் ஓடக் கூடியவை. ஆப்பிரிக்காவில் இவை அதிகம்.
ககபோ

வடிவேலு படத்தில் வரும் கன கச்சிதமாக கவ்விக் கொண்டீர்கள் போங்கள் என்ற வசனம் போல இருக்கா.. இது அது இல்லைங்க.. சாதாரண கிளிதான். ஆனால் இந்தக் கிளிக்கு இறக்கை இல்லாததால் பறக்க முடியாது.. எனவே இந்தக் கிளியைப் பார்த்து கிளிக்கு ரெக்கை முளைச்சுடுத்து.. ஆத்தை விட்டே பறந்து போயிடுத்துன்னு சொல்ல முடியாது.. இதை ஆந்தைக் கிளி என்றும் செல்லமாக சொல்வாராகள். நியூசிலாந்து வகை பறவை. ஆந்தை முகம், பென்குயின் மாதிரியான ஸ்டைல், வாத்து போன்ற தோற்றம் கொண்டவை இவை. வித்தியாசமான பறவை இது. ரொம்ப அழகாக இருக்கும். 2 அடி உயரம் வரை வளரும். ரொம்ப உடல் எடை கொண்டது.
பென்குவின்

இவையும் பறக்க முடியாது. நீரில் நன்றாக நீந்தும். நீச்சலுக்கேற்றார் போல இவற்றின் இறக்கை அமைந்துள்ளது. பென்குவின் இனத்தில் 18 வகைகள் உள்ளன. இதில் எந்த வகை பென்குவினாலும் பறக்க முடியாது. மாறாக பென்குவினைப் போல நீந்தக் கூடிய திறமை படைத்த பறவையைப் பார்க்க முடியாது. அத்தனை அழகாக நீந்தும், சூப்பராக டைவ் அடிக்கும். பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இது இருக்கும். அதேபோல இந்தப் பறவையால் நன்றாக நடக்கவும் முடியும்.
ஸ்டீமர் டக்

இந்த வாத்து வகையும் பறவைதான். ஆனால் இது பறக்காது. இந்த வகை வாத்துக்களில் 4 வகை இனங்கள் உள்ளன. அதில் 3 வகை வாத்துக்களால் பறக்க முடியாது. இன்னொரு வகை வாத்துக்களும் கூட ஓரளவுக்குததான் பறக்க முடியும். தென் அமெரிக்காவில் இந்த வகை வாத்துக்கள் அதிகம் உள்ளன. கிடுகிடுவென ஓடும். ரொம்பக் கோபக்கார வாத்தும் கூட. இந்த வாத்துகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிடும்போது அந்த இடமே போர்க்களம் போலக் காணப்படும். அப்படி அடிச்சுக்கும்.
வேகா

நியூசிலாந்தில் இந்த வகை பறவை உள்ளது. கோழி அளவுக்குததான் இதோட சைஸ் இருக்கும். இது இப்போது அருகி வரும் பறவை இனமாகும். இதைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த பறவைக்கு குரல் வளம் சூப்பராக இருக்கும். குறிப்பாக ஆண் பறவை சத்தமாக குரல் எழுப்பி பெண் பறவையை அழைக்கும். பதிலுக்கு அதுவும் அழகாக குரல் கொடுக்கும். ரொமான்ஸ் பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்தப் பறவைகள் நன்றாக நீந்தவும் தெரிந்தவையாகும்.
கிவி

கிவி பறவைகளும் பறக்காது. மொத்தம் 5 வகையான கிவி பறவைகள் உள்ளன. எதுவுமே பறக்காது. இந்தப் பறவைகளுக்கு இறக்கை உட்புறத்தில் இருக்கும். பார்க்க அழகாக இருக்கும். இவற்றின் குரல் சூப்பராக இருக்கும். நியூசிலாந்து நாட்டின் தேசிய அடையாளமாக உள்ளை கிவி பறவைகள்.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}