சென்னை: எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பாஜக உடன் பாமக சேர்வது என்பது பூஜ்ஜியத்துடன் ஒன்று சேர்வது போல, பாஜக பூஜ்ஜியம், பாமக ஒன்று என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
வருகின்ற லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென சிக்னலை மாற்றி பாஜகவுடன் போய் விட்டது பாமக. பாஜகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அணியில் இணையும் ஒரு முக்கிய பெரிய கட்சியாக தற்பொழுது பாமக உருவெடுத்துள்ளது. இன்று சேலத்தில் நடக்கும் பாஜக கட்சி கூட்டத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், பாஜகவில் பாமக இணைந்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், விவசாயிகள் தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜி எஸ் டி கொண்டு வந்ததால் தான் சிறு, குறு தொழிலாளர்கள் நலிவடைந்துள்ளனர். சமூகநீதி என்று வருகையில் ஒரே கோட்டில் திமுக மற்றும் அதிமுக இருக்கும்.
தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா ஏற்பு.. சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் தெலங்கானா, புதுச்சேரி ஒப்படைப்பு!
லோக்சபா தேர்தலில் மக்கள் அனைவரும் 100% ஓட்டளிக்க வேண்டும். எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும். மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. இதனை மக்கள் அனுமதிக்க கூடாது.
எம் பி சி பிரிவினரை பாமக கைவிட்டாலும் விசிக உறுதுணையாக இருக்கும். மக்கள் மத்தியில் பாஜக வெறுப்பு அரசியலை பரப்பி வருகிறது. இதனை மக்கள் அனுமதிக்க கூடாது. பாஜக உடன் பாமக சேர்வது என்பது பூஜ்ஜியத்துடன் ஒன்று சேர்வது போல, பாஜக பூஜ்ஜியம், பாமக ஒன்று என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}