- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி மாதம் திங்கள்கிழமை, டிசம்பர் 16ம் தேதி பிறக்கிறது. மார்கழி என்றதுமே திருப்பாவை தான் நமது நினைவுக்கு வரும். ஆண்டாள் அருளிய திருப்பாவை, கண்ணன் மீது பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பாகும். மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்களை தினசரி ஒன்றாகக் காணலாம்.
திருப்பாவை பாடல் 1 :
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் பஙாதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல்கொடுந் தொழிலன் நந்தகோபன் குமாரன்
ஏரார்ந்த கன்னியசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் பத்ந்தேலோ ரெம்பாவாய்

பொருள் :
பெருமாளுக்கு உகந்த மாதம் மார்கழி மாதம். இது முழுநிலவு ஒளிவீசும் நன்னாள் இது. அணிகலன்கள் அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வமிக்க சிறுமியர்களே! இன்று நாம் நீராட கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தை உடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}