- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 16 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 - நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
திருப்பாவை பாசுரம் 16 :
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பொருள் :
எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபனின் மாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் புரிபவனே!ஆயர்பாடி குலத்தில் பிறந்த சிறுமிகளான எங்களுக்கு இந்த மாளிகையின் கதவை திறந்து, உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். மாயச் செயல்கள் பல செய்பவனும், கருமையான நிறமுடையவனுமான கண்ணன் எங்களுக்கு சிறு பறையை தருவதாக நேற்று சொல்லி இருந்தான். அதுனை பெற்றுச் செல்ல நாங்கள் நீராடி, தூய்மையாக வந்துள்ளோம். அவனை துயில் எழுப்புமண பாடல்களையும் பாட வந்துள்ளோம். முடியாது என உன்னுடைய வாயால் ஆரம்பத்திலேயே சொல்லி எங்களை திருப்பி அனுப்பி விடாதே. மூடி உள்ள இந்த கதவை திறந்து கண்ணனை நாங்கள் தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
"எப்போ தான் சார் பேசுவீங்க?"...கேள்விகளால் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை...போட்டி போட்டு உயரும் வெள்ளி
தங்கத்திற்கு நிகராக உயர்ந்த மல்லிகைப் பூ விலை: ஒரு கிலோ ரூ.10,000
தேமுதிக கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
கேரளா கிரைம் ஸ்டோரி (2)
இயந்திரமாகிப் போன மனிதர்கள்.. Men Become Machines and vice versa
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
மன்னிப்பின் சக்தி.. The Power of Apology
3 பழம்.. 2 காய்.. ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்க.. புற்றுநோய்க்கே நல்ல மருந்தாம்!
{{comments.comment}}