- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 2 :

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்கலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள் :
பூமியில் வாழ்பவர்களே! நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள். பாற்கடலில் துயில் கொள்கின்ற பரந்தாமனுடைய திருவடிகளைப் பற்றி பாடுவோம். நெய், பால் போன்றவை உட்கொளள்ள மாட்டோம். விடியற்காலையில் குளித்து விட்டு, கண்ணில் மை தீட்டி அழகுபடுத்திக் கொள்ள மாட்டோம். கூந்தலில் மலர்கள் சூடிக் கொள்ள மாட்டோம். தீய சொற்களை மனதால் நினைக்க மாட்டோம். செய்யக் கூடாத தீய, பாவ செயல்களை செய்ய மாட்டோம். பிறரை பற்றி புறம் பேச மாட்டோம். இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் போதும் என்று அவர்கள் கூறும் அளவிற்கு தர்மங்கள் செய்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்
அன்பு எதையும் தாங்குமா?
தென்தமிழ் தலையங்கம்: ஆசியக் களத்தில் புது சகாப்தம்.. விளையாட்டு வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
Kerala Tour Diary: தூரத்தில் யானை தெரியுமா?.. கடவுளின் தேசம் அல்லவா!
{{comments.comment}}