- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 03 :
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
மூன்று உலகங்களையும் தன்னுடைய திருவடிகளால் அளந்து, திரிவிக்கிரமனாக காட்சி தந்த எப்பெருமாளின் நாமங்களை இந்த மார்கழி மாதத்தில் பாடி பாவை நோம்பு கடைபிடித்தால், நாடு முழுவதும் எந்த குறையும் இல்லாதம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெல் வளர, அந்த வயல் நடுவே மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் தேன் எடுக்க தேடி வரும். அத்தகைய செழிப்பில், பசுக்கல் வள்ளலை போல் குடம் குடமாக பாலை தருகின்றன. பெருமாளை போற்றி பாடிக் கொண்டே இருந்தால் இது போன்ற பல நன்மைகளை பெற்று, குறைவின்றி செல்வங்களை பெற்று, நிறைவாக வாழலாம்.
---
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}