சென்னை: திருவண்ணாமலையில் துணிகரமாக நடந்த ஏடிஎம் கொள்ளையில் ஹரியானாவைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏடிஎம் மெஷின்களை உடைத்து அதிலிருந்து ரூ. 72.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர திருட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்பட்டது.
வட மாநிலக் கொள்ளையர்களே இதில் சம்பந்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் நடத்திய தீவிர வேட்டையில் ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையர்கள்தான் இதைச் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஹரியானா விரைந்த தமிழ்நாடு போலீஸார், அங்கு வைத்து இருவரை பிடித்தனர். அவர்களது பெயர்கள் - முகம்மது ஆரிப் மற்றும் ஆசாத் கான். இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 3. லட்சம் பணத்தை பறிமுதல்செய்தனர். அவர்கள் இருவரும் அவர்களது சொந்த கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அங்கு வைத்து உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது கஸ்டடியில் தமிழ்நாடு போலீஸார் எடுத்தனர்.
இரு கொள்ளையர்களும் பின்னர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டனர். இந்த இருவரையும் வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீஸார் பிடிக்கவுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக குஜராத்துக்கும், கர்நாடகத்துக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
{{comments.comment}}