- கலைவாணி கோபால்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை உச்சிக்கு மகா தீபம் ஏற்றும் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
டிசம்பர் மாதம் என்றாலே, மிகச் சிறப்பு வாய்ந்தது அது. சென்னையின் சிறப்பு என்றால் மழை, திருவண்ணாமலையின் சிறப்பு என்றால் தீபத்திருவிழா. இந்த தீபத் திருவிழா குறைந்தது பத்து நாட்களாக நடைபெறும்.
முதலாம் நாள்: கொடியேற்றத்துடன் தொடங்கி கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெறும்.
இரண்டாம் நாள்: பஞ்ச மூர்த்திகள் இந்திர விமானத்தில் வலம் வருவார்கள்
மூன்றாம் நாள்: 1008 சங்க அபிஷேகம் நடைபெறும்
நான்காம் நாள்: காமதேனு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளும் கற்பக விருஷத்தில் இறைவியும் உலா வருவார்கள்
ஐந்தாம் நாள்: பகலில் பூஜையும் இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்திகள் உலா வருவார்கள்
ஆறாம் நாள்: 63 நாயன்மார்கள் ஊர்வலம்
ஏழாம் நாள்; பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் ஊர்வலமாக எழுந்துதருளப் பெறுதல்
எட்டாம் நாள்: தரையைத் தொடாத குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் உலா வருதல்
ஒன்பதாம் நாள்: விடியற்காலை 4 மணி முதல் பரணி தீபம் ஏற்றப்பட்டு, கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உழவர்கள் உலா வருதல்
பத்தாம் நாள்: பத்தாவது நாளே மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பத்தாம் நாள் அதாவது வருகின்ற டிசம்பர் 3, அன்று பிற்பகலுக்குப்பின் மாலை 6 மணி அளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கார்த்திகை மகா தீபம் இப்போது எடுத்துச் செல்லும் கொப்பரையில் ஏற்றப்படுதலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் சிறப்பான விஷயங்கள் என்னவென்றால், மகாதீபம் ஏற்றப்படும் போது பஞ்சமூர்த்தி தரிசனம், அர்த்த நாரீஸ்வரர் தரிசனம், மகாதீபம் உச்சி தரிசனம் என இந்த தீபம் முக்கியத்துவம் வந்ததாக மக்களிடையே கருதப்படுகிறது.
அதன்பின் இரவில், தெப்பத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இது முக்கியத்துவம் என்னவென்றால், ஒன்பது நாட்களாக உலா வந்த உற்சவமூர்த்திகளை குளிர வைப்பதற்காக கோயில் குளங்களில் பூ மேடை அமைத்து அதில் பஞ்சமூர்த்திகளுக்கு அவர்களை குளிர்விக்கும் விதமாக பூஜைகள் நடைபெறும். இதுவும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் ஜோதி ரூபத்தில் காட்சி தருவதாக இந்த கார்த்திகை திருவிழா நடைபெறுகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேக்கம் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
வாய்ப்புண் தொல்லை ஜாஸ்தியா இருக்கா??.. சீக்கிரம் குணமாக எளிய பாட்டி வைத்தியம்!
சரியா தூக்கம் வர மாட்டேங்குதா.. பூண்டு யூஸ் பண்ணிப் பாருங்களேன்.. மாற்றம் தெரியும்
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமாருக்கு.. கலைஞர் எழுதுகோல் விருது
பெங்களூருவில் தமிழ் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?.. சூப்பர் சான்ஸ் வந்திருக்கு பாஸ்!
{{comments.comment}}