விண்ணைப் பிளந்த அரோகரா  கோஷம்.. கோலாகலமாக தொடங்கியது திருவண்ணாமலை தீபத் திருவிழா!

Nov 17, 2023,12:08 PM IST

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவிற்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். கார்த்திகை மாதம்  என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தல் மற்றும் கார்த்திகை தீபத்திருநாள் தான் அனைவருக்கும் தெரிந்தது. 


கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருநாள் அன்று வீடுகள் மற்றும் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டாடுவர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியோற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம். 




அந்த கொடியோற்ற நிகழ்வு பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.  அண்ணாமலையார்  முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.  கொடி ஏற்றியதும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்கள் முழங்கினர். இன்று அதிகாலை சுமார் 5.31 மணியளவில் கொடியேற்றப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு  அரோகரா கோஷ மிட்டதுடன் சாமி தரிசனமும் செய்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும். திருவிழாவில் காலை மாலை  சாமி வீதி உலா நடைபெறும்.  முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். 


நவம்பர் 23ம் தேதி மகா தேரோட்டமும், நவம்பர் 26ம் தேதி அதிகாலை திருக்கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும்  ஏற்றப்படும். 


இந்த 10 நாட்களும் திருவண்ணாமலை விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில்  லட்சக்கானக்கான  பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த விழாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 5000த்திற்கும் அதிகமானவர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபத்தன்று 3,500 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?

news

விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு

news

நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்

news

உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!

news

செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

news

பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?

news

பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!

news

சரியான முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்