திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7வது நபரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று 5 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக நாகை, மயிலாடுதுறை, சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் இந்த மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இதனால் தங்களின் உடைமைகளை இழந்து மக்கள் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். திருவண்ணாமலையில் தொடர்ந்து கனமழை பெய்ததினால், சுமார் 2,668 அடி உயர திருவண்ணாமலை மலையில் இருந்து பாறைகள் உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வஉசி தெருவில் இருக்கும் வீடுகளின் மீது விழுந்தது.
அப்போது, மலையில் இருந்து மண் சரிந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண்ணும் சரிந்து விழுந்தது. இதில் ஒரு வீட்டின் மீது பாறை மற்றும் மண் சரிந்து விழுந்தது. இதனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வர முடியாமல் போனது. அந்த வீட்டில் ராஜ்குமார், மீனா, இனியா, மகா, கவுதம், வினோதினி,ரம்யா என்ற 7 பேர் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மண்சரிவில் சிக்கிய 7 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து 2 பேரின் உடல்கள் கிடைத்த நிலையில், இன்று மேலும் 2 பேர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறை விழுந்த நிலையில், மீட்கப்பட்ட உடல்கள் சிதைந்து இருந்தன. மீட்கப்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தை எண்ணி அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}