மார்கழி 15 திருவெம்பாவை பாசுரம் 15 - ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே!

Dec 29, 2024,04:32 PM IST
- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 15 :

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெருந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரைற்கு இங்ஙனங பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.



பொருள் :

அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த பெண்களே! நம் தோழி என்னுடைய தலைவன் என சிவனை ஒவ்வொரு முறையும் அழைப்பாள். அவரின் சிறப்புகளையும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பாள். மனம் மகிழ இவ்வாறு அவள் பேசுவதை கேட்கும் போது பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அப்படி பேசும் அவளுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தில் இருந்து அவளால் மீள முடியாது. அந்த சமயத்தில் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்க மாட்டாள். சிவ பெருமானை மட்டுமே தன்னுடைய தெய்வம் என பித்து பிடித்தது போல் இருப்பாள். அவளைப் வோலவே நம்மையும் ஆட்கொள்ள காத்திருக்கும் பல கலைகளுக்கும் தலைவாக இருக்கக் கூடிய சிவனின் திருவடிகளை பணிந்த பாடுவோம். பூக்கள் நிறைந்த நீண்ட குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்