- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 3 :
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பொருள் :
முத்து போன்ற அழகிய பற்களை காட்டி சிரித்து அனைவரையும் மயக்குபவளே! இதற்கு முன்பெல்லாம் நாங்கள் வந்து எழுப்புதற்கு முன்பே தயாராக நீயே இருப்பாய். சிவனே என்னுடைய தலைவன், இன்ப வடிவானவன், இனிமையானவன் என வாய் ஓயாமல் சிவனின் புகழை பாடிக் கொண்டே இருப்பாய். ஆனால் இப்போது இவ்வளவு எழுப்பியும் எழ மனம் இல்லாமல் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாயே. கதறவை திற என்கிறார்கள் வெளியில் காத்திருக்கும் தோழி. அதற்கு பதிலளிக்கும் தூங்கிக் கொண்டிருக்கும் தோழி, " ஏதோ தெரியாமல் கண் அயர்ந்து விட்டேன். அதற்காக இப்படி கடுமையாக பேச வேண்டுமா? இறைவன் மீது பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களை போன்று பக்தி செய்வதிலும், விரதம் கடைபிடிப்பதிலும் எனக்கு அனுபவம் கிடையாது. பக்திக்கு நான் புதியவள். என்னுடைய தவறை பெரிதுபடுத்துவது சரியா? என வருந்தி சொல்கிறாள்.
அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழிகள், இறைவன் மீது வைத்துள்ள தூய்மையான அன்பானது, சிவனின் மீது தூய பக்தி படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பது எங்களும் தெரியும். நீ சீக்கிரம் எழுந்து வர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அவசரப்படுத்தினோம் என தெரிவிப்பதாக மாணிக்கவாசகர் எழுதி உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது
விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!
மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்
{{comments.comment}}