மார்கழி 4 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 4.. ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ!

Dec 18, 2024,06:51 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

திருவெம்பாவை பாசுரம் 4:

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.




பொருள் :

அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய பெண்ணெ, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?  என்ற கேட்ட தோழிடம், அழகிய கிளிகள் பேசும் மொழிகளை போன்ற இனிமையான சொற்களை பேசும் தோழிகள் அனைவரும் வந்து விட்டார்களா? என கேட்கிறாள் வீட்டிற்குள் இருக்கும் பெண். அதற்கு வெளியில் காத்திருக்கும் தோழி, வீட்டிற்குள் இருந்து இப்படி கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறாயே, இது சரியா? வெளியில் வந்து நீயே எண்ணிப் பார்த்துக் கொள். ஆனால் அதுவரை காத்திருந்து பொழுதை வீணாக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. 

தேவர்களும் வணங்கி அருள் பெற காத்திருக்கும் அமுதம் போன்ற சிவ பெருமான் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அருட் செல்வங்களை வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறார். அவரை புகழ்ந்து பாடி, மனம் நினைத்து உள்ளம் உருகிபாடிட நாங்கள் செல்ல வேண்டும். அனைவரும் சிவனை போற்றி பாட காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்து எண்ணிக்கையை சரி பார்த்துக் கொள். எண்ணிக்கை குறைந்தால் பிறகு சென்று நீ தூங்கிக் கொள் என்றாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்