தூத்துக்குடி: கனமழையில் சிக்கி தவித்து வந்த தூத்துக்குடி இன்று ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இன்னும் சில இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. அதையும் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி ஊரையே ஒரு வழியாக்கிவிட்டு சென்றுள்ளது. மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியினர்.
இந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து மீட்பு பணிகளை செய்து வந்தனர். தூத்துக்குடியை மீட்க பல நாட்கள் ஆகும் என்றி எண்ணியிருந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மீட்பு பணிகளை விரைந்து செய்ததினால் இன்று தூத்துக்குடி ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தபோது கூட சில இடங்களில் அவர் வெள்ள நீரில்தான் இறங்கிச் செல்லும் நிலை இருந்தது.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்தாக கூடுதல் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரபாகர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டம் தனி தீவாக துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்காக ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்கள் வழக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு தரப்பினர்களின் முயற்சியால் தற்போது தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
சாலை போக்குவரத்து , விமான சேவைகளும் தொடங்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மக்களும் தங்கள் ஆன்றாட பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர். வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}