- ஸ்வர்ணலட்சுமி
துளசி மாடம்: ஆன்மிக சூழலை மேம்படுத்த, நேர்மறை ஆற்றல் பெருக, துளசி மாடம் வைத்து வழிபடுவது புனிதமாகும்.
ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்:
ஸ்ரீமத் துளசி அம்மா திருவே கல்யாணி அம்மா வெள்ளிக்கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க்கிழமை செழிக்க வந்த செந்திருவே தாயாரே உந்தன் தாளி ணை யில் நான் பணிந்தேன்... பச்சை பசுமை உள்ள துளசி நமஸ்தே! பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே! அற்ப பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே! அஷ்ட ஐஸ்வரியம் அளிப்பாய் நமஸ்தே!...

சரியான திசையை தேர்ந்தெடுத்து ,அதனைச் சுற்றி சுத்தமான இடத்தை அமைத்து, துளசி மாடம் கட்டி துளசி செடியை நட்டு தினமும் வழிபடுவது புனிதமானதாகும். துளசி மாடம் வைப்பதற்கு ஏற்ற திசை என்ன என்று பார்த்தால் வடக்கு அல்லது கிழக்கு திசையை தேர்ந்தெடுப்பது நல்லது. அந்த இடம் வீட்டுக்குள்ளேயும் இருக்கலாம், அல்லது வெளிப்புற முற்றத்திலும் இருக்கலாம் .ஆனால் கால் நடமாட்டம் இல்லாத சுத்தமாக அந்த இடம் இருக்க வேண்டும். சூரிய ஒளி நன்கு படும் இடமாக இருப்பது நல்லது.
துளசி மாடம் செங்கல், களிமண் அல்லது துளசி மாடம் போன்றே இருக்கும் தொட்டிகளில் துளசிச் செடியை வைத்து மண் நிரப்பி ,நன்கு நீரூற்றி பராமரிக்க வேண்டும். துளசி மாடம் வீட்டில் இருப்பதனால் நல்ல அதிர்ஷ்டம் ,மன அமைதி, குடும்பத்தில் ஒற்றுமை, நேர்மறை ஆற்றல் பெருகும். பெருமாளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம் .மேலும் வாஸ்து தோஷங்களை நீக்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.
குறிப்பாக பெண்கள் துளசி செடியை வழிபடுவதனால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும். துளசி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள் என்று பார்த்தால் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதனால் தொண்டைப்புண் மற்றும் சளி இருமல் சரியாகும். துளசியை கொதிக்க வைத்த நீர் பருக காய்ச்சல் சரியாகும். துளசி மாட செடியை வழிபாட்டிற்கு மட்டும் வைத்துக் கொள்வது நல்லது.
மற்றொரு சிறிய தொட்டியில் துளசிச் செடியை வைத்து அதனை உட்கொள்ள பயன்படுத்திக் கொள்வது நல்லது. துளசி மாடத்தின் அருகில் நன்றாக சுத்தம் செய்துவிட்டு ,கோலமிட்டு, தினமும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி ,பெண்கள் வழிபாடு செய்வதனால் நல்ல ஆரோக்கியம் கிட்டும்.
துளசி மாடத்தின் கீழ் விளக்கு ஏற்றி ,பூஜைக்கு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நைவேத்தியமாக கற்கண்டு அல்லது உலர் திராட்சை வகைகளை பூஜைக்கு வைத்து தீப தூப ஆராதனை செய்து வழிபடுவது சிறப்பு. துளசி இலைகள் விஷ்ணுவின் வடிவம். ஆகையால் துளசிச் செடியை வைத்து வழிபாடு செய்வதனால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
துளசி மாடம் இந்துக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வில் ஆன்மீகம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த துளசி செடி லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுவதனால் தினமும் வழிபாடு செய்யச் செய்ய செல்வமும் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாழ்க்கை என்பது ஏதோ ஒரு நம்பிக்கையில் தானே ஓடிக்கொண்டிருக்கிறது. இது போன்ற மன அமைதி தரும் வழிபாடுகள் செய்து அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக!... எந்த காரியத்தையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் கட்டாயம் கிடைக்கும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}