சென்னை: வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இன்னும் பனி போகலைல்ல?.. தை பொறந்தா வாழ்க்கைக்கு நல்ல வழி பிறக்கும்.. ஆனால் தை முடிஞ்சாதான் பனிக்கு டாட்டா காட்டா முடியும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டுதான் ஆகணும்.
இந்தக் குளிர் காலத்துல நம்ம வீட்ல இருக்க குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சளி, இருமல், தும்மல்னால அவதிப்படுவாங்க. அவங்களுக்கெல்லாம் வீட்டிலேயே ஈஸியா ஒரு ஹெல்த்தி ரெசிபி செஞ்சு கொடுத்து அவங்கள சாப்பிட சொல்லுங்க.. அப்படி ஒரு ஈஸியான ஹெல்த்தியான ரெசிபி தான் நான் இன்னைக்கு உங்களோட ஷேர் பண்ண போறேன்.
அது வேற ஒன்னும் இல்லங்க.. நம்ம வீட்டிலேயே அல்லது வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைக்கிற தூதுவளைய வச்சு தான் ஒரு ரெசிபி பண்ண போறோம்.. என்ன தெரியுமான.. சூப்பரான சுவையான பணியாரம்.. எப்படி பண்ணனும்னு விளக்கமா சொல்றேன் கேட்டுக்கங்க.
தேவையான பொருட்கள்
தூதுவளை - 1 கட்டு
பச்சை மிளகாய்- 2
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1 (பெரியது)
ரவை - 1 கப்
இட்லி மாவு - 1கப்
கேரட் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு கட்டு தூதுவளையை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் கழுவிய தூதுவளை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கப் ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஒரு கப் இட்லி மாவு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் , சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலந்து கொள்ளவும். பின் குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து மாவை பணியாரங்களாக ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறவும். அவ்வளவுதாங்க ஈஸியான ஹெல்த்தியான தூதுவளை பணியாரம் ரெடிங்க... சூடா சாப்பிட வேண்டியதுதான்!
நீங்களும் உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சு இந்தக் குளிர்கால நோய்களிலிருந்து உங்களையும் உங்க வீட்ல இருக்கிறவங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஓகே.. அடுத்து இன்னொரு ஹெல்த்தியான ரெசிபியோட மறுபடியும் வர்றேன்.. அதுவரைக்கும்.. பை!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}