டெல்லி: ஹெல்த் பிராடக்ட் பிசினஸ் என்ற பெயரில் ரூ. 50 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பெண் மல்யுத்த வீராங்கனை மற்றும் அவரது கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் திஹார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக இருக்கும் தீபக்சர்மா என்பவர்.
தீபக் சர்மா பாடிபில்டிங்கில் அதிக நாட்டம் கொண்டவர். அவரது பிட்னஸுக்கு பெயர் போனவர். இவரைத்தான் ரூ. 50 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக பிரபல மல்யுத்த வீராங்கனை ரெளனாக் கலியா மற்றும் அவரது கணவர் அங்கித் கலியா மீது புகார் எழுந்துள்ளது.
நடந்தது இதுதான்
2021ம் ஆண்டு டிஸ்கவரி சானலில் அல்டிமேட் வாரியர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ நடந்துள்ளது அதில் ஒரு பங்கேற்பாளராக ரெளனாக் கலியாவும், தீபக் சர்மாவும் கலந்து கொண்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனை என்ற வகையில் ரெளனாக்கும், பாடிபில்டர் என்ற அடிப்படையில் தீபக் சர்மாவும் அதில் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு ரெளனாக் தனது நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட ஹெல்த் சப்ளிமென்ட் வெளியீட்டு விழாவுக்கு தீபக் சர்மாவை அழைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு வந்த தீபத் சர்மாவிடம், தனது கணவர் அங்கித் கலியாவை, அறிமுகப்படுத்தி வைத்தார். தாங்கள் ஹெல்த்கேர் புராடக்ட் தயாரிப்பு பிசினஸில் இருப்பதாகவும், தனது கணவர் ஒரு பிரபலமான தொழில்முனைவோர் என்றும் கூறியுள்ளார் ரெளனாக்.
கடந்த ஜனவரி மாதம் தீபக் சர்மாவைத் தொடர்பு கொண்ட ரெளனாக், தனது கணவரின் பிசினஸ் சூடு பிடித்துள்ளதாகவும், பெரியஅளவில் அதை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார் ரெளனாக். மேலும் நீங்க 50 லட்சம் முதலீடு பண்ணுங்க.. விற்பனையில் 10 முதல் 15 சதவீத லாபத்தை உங்களுக்கு கொடுக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் உங்களை பிராண்ட் அம்பாசடர் ஆகவும் போடுகிறோம் என்றும் ரெளனக் கூறினாராம்.
இதைத் தொடர்ந்து 50 லட்சம் பணத்தை தீபக் சர்மா கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி லாபத்தையும் தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லையாம். இதைத் தொடர்ந்து டெல்லி போலீஸில் தீபக் சர்மா புகார் கொடுக்க.. போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Video: மல்யுத்த வீராங்கனை மீது பரபர புகார்
ஆனால் தான் மோசடி செய்யவில்லை என்று கண்ணீர் மல்க மறுத்துள்ளார் ரெளனாக்.. மல்யுத்த வீராங்கனை மீதும் அவரது கணவர் மீதும் பாடி பில்டரான திஹார் சிறை உதவி கண்காணிப்பாளர் கொடுத்துள்ள இந்தப் புகாரால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}