சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும், குலசை தசரா விழாவை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அதிகளவில் காணப்படும். இதனால் பேருந்துகளின் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். இதில் இருந்து பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவினை www.tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 3ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}