திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் கவுண்ட்டரில் இன்று (ஜனவரி 13) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை கிளம்பியது. இந்த சர்ச்சை சிறிது அடங்கிய, தற்போது வைகுண்ட ஏகாதசி விழா திருப்பதியில் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா துவங்குவதற்கு முன்பாகவே திருப்பதி வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக, வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன் பெறுவதற்காக அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் திருப்பதியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது திருப்பதி பக்தர்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து பக்தர்கள் முழுவதுமாக மீண்டு வராத நிலையில், இன்று பிற்பகல் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் உள்ள லட்டு பிரசாத கவுண்ட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பக்தர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் இடத்தில் உள்ள 47வது கவுண்ட்டரில் திடீரென ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இதனால் கம்யூட்டரில் அழுத்தம் ஏற்பட்டு, கம்யூட்டரும் பாதிக்கப்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக லட்டு விநியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த பக்தர்கள், தேவஸ்தான பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு தீயணைப்பு கருவிகள் கொண்டு மேலும் தீ பரவால் தடுக்கப்பட்டது. மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டது.
ஏழுமலையான் கோவிலில் அடுத்தடுத்து நடந்து வரும் இது போன்ற அசம்பாவிதங்கள், விபத்துக்கள் பக்தர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்து குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}